
Last Updated : 08 Jul, 2023 02:39 PM
Published : 08 Jul 2023 02:39 PM
Last Updated : 08 Jul 2023 02:39 PM

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் எம் சீரிஸ் வரிசையில் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி AMOLED டிஸ்பிளே
- Exynos 1280 சிப்செட்
- 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 6,000mAh பேட்டரி
- 25 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- வரும் 15-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது
- மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது
- 6ஜிபி ரேம் கொண்ட போனின் விலை ரூ.18,999 மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட போனின் விலை ரூ.20,999. அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
Unleash the monster with the all-new #GalaxyM34 5G. Now capture those Monster shots with ease on the go with a 50MP No Shake Cam. Don’t compromise on your entertainment with a 120Hz sAMOLED Display for a bright and vivid viewing experience even in broad daylight. pic.twitter.com/edYeBLCWYF
— Samsung India (@SamsungIndia) July 6, 2023
தவறவிடாதீர்!