Sports

இந்திய அணி ஜூலை மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம்… டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு…

இந்திய அணி ஜூலை மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம்… டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு…
இந்திய அணி ஜூலை மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம்… டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு…


இந்திய அணி ஜூலை மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாட உள்ளது.

இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் பிறகு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. பின்னர் ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதி நிறைவடைகிறது. அதன் பிறகு ஜூலை மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதற்கான அட்டவணையை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூலை 6 முதல் 14ஆம் தேதி வரை ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியிருப்பதாவது: “கிரிக்கெட்டிற்கு பங்களிப்பதில் பிசிசிஐ எப்போதும் முன்னோடியாக திகழ்கிறது. ஜிம்பாப்வே கிரிக்கெட்டிற்கு எங்களது ஆதரவு தேவை. சக உறுப்பினர் வாரியங்களை ஆதரிப்பதில் எங்களது அர்ப்பணிப்பு மற்றும் கிரிக்கெட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான எங்கள் கொள்கையுடன் ஒத்துப் போகிறது. ஜிம்பாவே நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு இந்த தொடர் உதவும். மேலும், இருதரப்பு நாட்டு கிரிக்கெட்டை வலுவாகவும், வணிக ரீதியாக சாத்தியமானதாகவும் மாற்ற பிசிசிஐ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

விளம்பரம்

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .

  • முதலில் வெளியிடப்பட்டது:



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *