
Last Updated : 13 Jul, 2023 10:43 AM
Published : 13 Jul 2023 10:43 AM
Last Updated : 13 Jul 2023 10:43 AM

சென்னை: இந்தியாவில் வரும் 21-ம் தேதி ‘நத்திங் போன் (2)’ ஸ்மார்ட்போன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட்டை விற்பனை செய்தது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இந்நிறுவனத்தின் நிறுவனர் கார்ல் பெய் (Carl Pei). இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-இல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார். இந்நிலையில், இப்போது இந்தியாவில் நத்திங் நிறுவனத்தின் போன் (2) ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
நத்திங் போன் (2) சிறப்பு அம்சங்கள்
- 6.7 இன்ச் ஃபுள் ஹெச்.டி+ OLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரேஷன் 1 ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 3 ஆண்டுகளுக்கான இயங்குதள அப்டேட்
- பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் + 50 மெகாபிக்சல் கேமரா இடம் பெற்றுள்ளது
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 4,700mAh பேட்டரி
- 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இந்த போனின் விலை ரூ.44,999 முதல் தொடங்குகிறது
- வரும் 21-ம் தேதி முதல் விற்பனை ஆரம்பமாகிறது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும்
Phone (2).
An icon, evolved. Purposefully designed from the inside out to deliver a premium experience you can count on. With new ways to interact with a smartphone to allow you to feel more present when it matters most.
Come to the bright side. pic.twitter.com/gBYBJKezNo
— Nothing (@nothing) July 11, 2023
தவறவிடாதீர்!