Health

ஆபத்தான மெலனோமா தோல் புற்றுநோயை தடுக்க செய்ய வேண்டியது என்ன?

ஆபத்தான மெலனோமா தோல் புற்றுநோயை தடுக்க செய்ய வேண்டியது என்ன?
ஆபத்தான மெலனோமா தோல் புற்றுநோயை தடுக்க செய்ய வேண்டியது என்ன?


தோல் புற்றுநோய் என்றால் என்ன?
தோல் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இதை குணப்படுத்தவும் செய்யலாம். அதனால் உடலில் இருக்கும் மச்சங்கள், கட்டிகள் போன்றவை வளர்ச்சியில் மாற்றம் அடையும் போது தோலை தொடர்ந்து பரிசோதிப்பது நல்லதாக இருக்கும்.

  • தோல் புற்றுநோயில் 3 வகைகள் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
  • பாசல் செல் கார்சினோமா – Basal cell carcinoma
  • ஸ்குவாமஸ் செல் கார்சினோமா Squamous cell carcinoma
  • மெலனோமா Melanoma
முதல் இரண்டு

மெலனோமா தோல் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகின்றன. இது மெலனோமாவை விட பொதுவானவை. இந்த மூன்றில் மெலனோமா புற்றுநோய் ஆபத்தானது.
தோல் புற்றுநோய் ஏன் வருகிறது?

  • சூரியனிடமிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சு
  • சூரிய விளக்குகளிடமிருந்து வரும் புற ஊதாகதிர்வீச்சுக்கு நீண்ட நேரம் வெளிப்படுவது
  • வெளிர் அல்லது சிகப்பு நிறம் கொண்டவர்கள்
  • சிவப்பு நிற முடி கொண்டவர்கள்
  • நீல அல்லது பச்சை நிற கண்கள் கொண்டவர்களுக்கு மெலனோமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • மச்சங்கள் நிறத்தை மாற்றுவது
  • அதிக எண்ணிக்கையிலான மச்சங்கள்
  • மெலனோமா அல்லது அசாதாரண மச்சங்களின் குடும்ப வரலாறு கொண்டவர்கள்
  • பளபளப்பான தோல்
  • கொப்புளங்கள் வெயிலில் எரிந்தால்

தோல் புற்றுநோய் தவிர்க்க சூரியனிடமிருந்து பாதுகாப்பு

  • இயன்றவரை சருமத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்
  • எஸ்பிஎஃப் 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்
  • வெளியில் செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு பின்பும் அதை பயன்படுத்துங்கள்
  • முகம், தலை, கழுத்து மற்றும் காதுகளை பாதுகாக்க தொப்பி அணிவது அவசியம்
  • சன்கிளாஸ்கள் அணிவது பாதுகாப்பானது.
  • இயன்றவரை சூரிய ஒளியில் படாமல் நிழலில் இருப்பது பாதுகாப்பானது.

புற ஊதா கதிர்வீச்சு தாக்கத்தை தவிர்ப்பது எப்படி?

  • சூரிய ஒளியை நாம் பார்க்கவோ உணர்வதால் கிடைக்கும் வெப்பம் போன்றதோ அல்ல. இது அறியாமலே சருமத்தில் சேரும்.
  • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நேரடியாக சூரிய ஒளியில் சருமத்தை வெளிப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இந்த நேரங்களில் சூரியனின் கதிர்கள் வலுவாக இருக்கும். அதனால் சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பதே தோல் புற்றுநோய் தடுக்க பாதுகாப்பான வழியாக இருக்கும். வெளியில் செல்ல வேண்டிய நிலையிலும் பாதுகாப்பான பொருள்களுடன் செல்வதோடு நிழலில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.


வீட்டினுள் Indoor Tanning தோல் பதனிடுதல் தவிர்க்கவும்
உட்புற தோல் பதனிடுதல் ( தோலை கருமையாக்க தோல் பதனிடும் படுக்கை, சன் லேம்ப், சன் மெத்தை ) பயன்பாட்டை தடுக்க வேண்டும். இது அதிக அளவு யுவி கதிர்களை வெளிப்படுத்துகிறது. காலப்போக்கில் புற ஊதா கதிர்களை அதிகமாக வெளிப்படுத்துவதால் இது தோல் புற்றுநோய், கண்புரை மற்றும் கண் புற்றுநோய்களை கூட உண்டு செய்யும். இந்த புற ஊதாக்கதிர்கள் தோலின் உள் அடுக்கை அடையும் போது தோல் அதிக மெலனின் உற்பத்தி செய்கிறது. இது தோலின் வெளிப்புற அடுக்கு நோக்கி நகர்ந்து பழுப்பு நிறமாக மாற்றுகிறது. அடிப்படையாக தோலின் நிறம் பழுப்பு நிறமாவது தோல் சேதத்தின் அறிகுறியாகும். இந்நிலையில் உடனடியாக மருத்துவரை அணுகுவது மட்டுமே பாதுகாப்பானதாக இருக்கும்.
ஆரோக்கியமான உணவு முறை
பாசல் செல் மற்றும் ஸ்குவாமஸ் செல் கார்சினோமா உட்பட மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய்கள் அபாயம் தடுக்க சமீபத்திய ஆராய்ச்சி சில உணவு மாற்றங்களை கூறுகின்றன. வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உட்பட ஆன் டி ஆஸ்கிடண்ட்கள் எனப்படும் ஃப்ரீ ரேடிக்கல்கள் எதிர்த்து போராடவும்,. தோல் புற்றுநோயை தடுக்கவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2002 ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் டெர்மட்டாலஜி ஆய்வில் புற ஊதா கதிர்வீச்சு உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்களை குறைப்பதன் மூலம் தோல் சேதத்தை உண்டு செய்கிறது. இதில் கவனம் செலுத்துவதன் மூலம் பலமான தோல் பாதுகாப்பு உறுதி.

உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்கள் இரண்டுமே நோயை தடுக்க கூடும் என்றாலும் பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்கள் உணவுகளை வலியுறுத்துகின்றனர். சப்ளிமெண்ட் சமயங்களில் அதிக நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கலாம். உணவில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, துத்தநாகம், செலினியம், பீட்டா கரோட்டின் , ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், லைகோபீன் மற்றும் பாலிபினால்கள் போன்ற உணவுகள் சேர்க்கலாம். உணவில் சேர்க்க வேண்டிய சத்துக்கள் என்பதோடு உடல் ஆரோக்கியம் வலுப்பட உதவும். சரும புற்றுநோயையும் தடுக்கும்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *