Sports

ஆசிய கோப்பை | தோல்விக்கு பிறகு பாபர் அஸம் – ஷஹீன் ஷா அப்ரிடி இடையே வார்த்தைப் போர் | War Of Words Between Babar Azam And Shaheen Afridi After Asia Cup 2023 Exit

ஆசிய கோப்பை | தோல்விக்கு பிறகு பாபர் அஸம் – ஷஹீன் ஷா அப்ரிடி இடையே வார்த்தைப் போர் | War Of Words Between Babar Azam And Shaheen Afridi After Asia Cup 2023 Exit


ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறிய பிறகு பாபர் அஸம் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

ஹரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோரின் காயங்களால் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரில் பின்னடைவை சந்தித்தது. இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வி கண்டு தொடரில் இருந்தே வெளியேறியது. இதனிடையே, தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸமும், ஷஹீன் ஷா அப்ரிடியும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தோல்விக்கு பிறகு அணி வீரர்கள் மத்தியில் பேசிய பாபர் அஸம், மூத்த வீரர்களின் பெர்பாமென்ஸ் குறித்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

அப்போது ஷஹீன் ஷா அப்ரிடி குறுக்கிட்டு, “பொதுவாக பேச வேண்டாம், நன்றாக விளையாடியவர்களை ஏன் விமர்சனம் செய்ய வேண்டும்” என்று பேசியதாக சொல்லப்படுகிறது.

அதற்குப் பதிலளித்த பாபர், “யார் நன்றாகச் செய்தார்கள், யார் செய்யவில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.” என்று தெரிவித்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பிற்குச் சென்ற கேப்டன் பாபர், ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் யாருடனும் பேசவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *