Sports

அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா அபார பந்து வீச்சு: இங்கிலாந்தை 106 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா | அஸ்வின் பும்ராவின் அபார பந்துவீச்சால் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது

அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா அபார பந்து வீச்சு: இங்கிலாந்தை 106 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா |  அஸ்வின் பும்ராவின் அபார பந்துவீச்சால் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது
அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா அபார பந்து வீச்சு: இங்கிலாந்தை 106 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா |  அஸ்வின் பும்ராவின் அபார பந்துவீச்சால் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது


விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

விசாப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்களும் இங்கிலாந்து 253 ரன்களும் எடுத்தன. 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 255 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

399 ரன்கள் இலக்குடன் பேட்செய்த இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 14 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. சாக் கிராவ்லி29, ரெஹான் அகமது 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பென் டக்கட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்று4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியானது ஜஸ்பிரீத் பும்ரா, அஸ்வின் ஆகியோரின் அபாரமான பந்து வீச்சால் 69.2 ஓவர்களில் 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரெஹான் அகமது 23 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் படேல்பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆலிபோப் 21 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் சிலிப் திசையில் நின்ற ரோஹித் சர்மாவின் அற்புதமான கேட்ச் காரணமாக நடையைக் கட்டினார். ஜோ ரூட் 16 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் விரைவுகதியில் விளையாடி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

சீராக ரன்கள் சேர்த்த சாக்கிராவ்லி 132 பந்துகளில், சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஜானி பேர்ஸ்டோ 26 ரன்களில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில்எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயரின் அற்புதமான 'ட்ரோ' காரணமாக ரன் அவுட் ஆனார். இதன் பின்னர் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை தளர்ந்தது. 8-வது விக்கெட்டுக்கு இணைந்த பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி ஜோடி சற்று போராடியது.

55 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். பென்ஃபோக்ஸ் 69 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய சோயிப் பஷீர் ரன் ஏதும் எடுக்காமல் முகேஷ்குமார் பந்து வீச்சில் விக்கெட்கீப்பர் கர் பரத்திடம் பிடிகொடுத்து வெளியேறினார். கடைசி பேட்ஸ்மேனாக டாம் ஹார்ட்லி 47 பந்துகளில், ஒரு சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்து வீச்சில் ஸ்டெம்பை பறிகொடுக்க இந்திய அணி வெற்றிக் கோட்டை கடந்தது.

ஜஸ்பிரீத் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். முகேஷ் குமார், குல்தீப் யாவ், அக்சர் படேல் ஆகியோர் தலா ஒருவிக்கெட் கைப்பற்றினர். முதல் இன்னிங்சையும் சேர்த்து 9 விக்கெட் கைப்பற்றிய பும்ரா ஆட்ட நாயகனாக தேர்வானார். 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி கண்டது. 3-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

'பும்ரா ஒரு சாம்பியன்': விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, ​​“இங்கிலாந்தைப் போன்ற அணிக்கு எதிராக இளம் இந்திய அணி செயல்பட்ட விதத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஒரு சூழ்நிலையில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது என்பது எளிதல்ல. எங்கள் பந்து வீச்சாளர்கள் முன்னேற்றம் காண வேண்டும் என விரும்பினேன். அதை, அவர்கள் செய்திருக்கிறார்கள். ஜஸ்பிரீத் பும்ரா எங்களுக்கு சாம்பியன் வீரர்” என்றார்.

'அஸ்வின் 499': இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகள் மைல்கல் சாதனையை எட்டியது கைநழுவியது. 499 விக்கெட்களை வீழ்த்திய அவர், இங்கிலாந்து பேட்ஸ்மேன் டாம் ஹார்ட்லியை ஆட்டமிழக்கச் செய்தார். ஆனால் டாம் ஹார்ட்லி ரிவ்யூ சென்றார். அப்போது டி.வி. நடுவர் ஆய்வு செய்ததில் பந்து கையுறையில் படவில்லை என்பதும் தோள்பட்டையில் உரசிச் சென்றதும் தெரியவந்தது. இதனால் டாம் ஹார்ட்லி ஆட்டமிழப்பில் இருந்து தப்பித்தார்.

'நம்பிக்கை இருந்தது': இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறும்போது, ​​“இலக்கை துரத்திப் பிடிப்போம் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அதிக ரன்களை துரத்திப் பிடிக்க வேண்டும் என்கின்ற அழுத்தமான சூழலே இங்கிலாந்து அணியை பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட வைத்துள்ளது. பேட்ஸ்மேன்களின் பேட்டிங் அணுகுமுறைக்கு நான் எந்த அறிவுரையும் கூறப்போவதில்லை. இந்தியாவை நாங்கள் அதிகமாக அழுத்தத்தில் வைத்திருந்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை” என்றார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *