National

அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகில் கேஎஃப்சி கடையா? கோயில் நிர்வாகம் சொன்ன ஒரே கண்டிஷன்!!

அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகில் கேஎஃப்சி கடையா? கோயில் நிர்வாகம் சொன்ன ஒரே கண்டிஷன்!!
அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகில் கேஎஃப்சி கடையா? கோயில் நிர்வாகம் சொன்ன ஒரே கண்டிஷன்!!


ராமர் கோயில் திறப்பு விழாவைத் தொடர்ந்து அயோத்தியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளதால், கோயில் வளாகத்தைச் சுற்றி பிரபலமான உணவுச் கடைகள் உள்ளிட்ட பல உணவகங்கள் திறக்கப்படுகின்றன.

அயோத்தியில் ராமர் கோயிலின் பிரம்மாண்ட திறப்பு விழாவுக்குப் பிறகு, உலகம் முழுவதும் இருந்து பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகை தர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அதிகமான மக்கள் வருவதால், பல உணவு கடைகள் கோயிலுக்கு அருகில் திறக்கப்பட்டு, சுவையான சைவ உணவை வழங்குகின்றன. இந்திய உணவுகளுடன், கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் டோமினோஸில் இருந்து பீஸ்ஸாக்கள் போன்ற தங்களுக்கு பிடித்த துரித உணவுகளையும் சுற்றுலா பயணிகள் வாங்கி உண்ண முடியும்.

அயோத்தியைச் சுற்றியுள்ள 15 கிமீ புனித யாத்திரை சுற்றுகளான பஞ்ச் கோசி பரிக்ரமாவில் உணவு விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ராமாயணத்துடன் இணைக்கப்பட்ட புனிதத் தலங்களுக்குச் செல்லும் போது கடைகளில் இறைச்சி மற்றும் மதுபானங்கள் வழங்கப்படக்கூடாது என கோவில் நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

இது குறித்து கோவில் நிர்வாகம் கூறுகையில், “அயோத்தியில் கடைகளை அமைக்க பெரிய உணவகங்களில் இருந்து சலுகைகள் கிடைத்துள்ளன.. நாங்கள் அவர்களை இருகரம் நீட்டி வரவேற்கிறோம், ஆனால் பஞ்ச் கோசிக்குள் அசைவ உணவுகளை வழங்கக்கூடாது என்று ஒரே ஒரு கட்டுப்பாடு உள்ளது” என்று கூறியுள்ளது.

விளம்பரம்

மேலும் படிக்க…
திருப்பதியில் இந்த 3 நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் உள்ளிட்ட சில சேவைகள் ரத்து… ஏன் தெரியுமா?

கேஃப்சி போன்ற பிரபலமான உணவு விற்பனை நிலையங்கள் கோவிலுக்கு வெளியே சற்று தொலைவில் அமைந்துள்ளன, ஏனெனில் இந்த கடைகள் அசைவ உணவுகளை விற்கின்றன. “அயோத்தி-லக்னோ நெடுஞ்சாலையில் KFC அதன் யூனிட்டை அமைத்துள்ளது, ஏனென்றால் நாங்கள் அசைவ உணவுகளை இங்கு அனுமதிக்கவில்லை. சைவப் பொருட்களை மட்டுமே விற்க முடிவு செய்தால் KFCக்கு கூட இடம் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,“என்று அயோத்தியின் அரசு அதிகாரி விஷால் சிங் மேலும் கூறினார்.

விளம்பரம்

பக்கத்தில்
நியூஸ்18 தமிழ்
இணையதளத்தை
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்டிடிவி அறிக்கையின்படி, ராமர் கோவிலுக்கு அருகாமையில்  உணவுக் கடைகள் அமைந்தால் வியாபாரம் சிறப்பாக இருக்கும். ராமர் கோயிலில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள பீட்சா ஹட் போன்ற உணவு விற்பனை நிலையங்கள் மிகவும் நல்ல வியாபாரம் நடைபெற்று வருகின்றன. ஆனால் கோவிலுக்கு அருகில் கடை இல்லை என்றும் புலம்புகின்றனர். கோவிலுக்கு வெளியே பீட்சா ஹட் அமைந்திருந்தாலும், அயோத்தியில் சைவ உணவுகளை மட்டுமே இந்த விற்பனை நிலையம் வழங்குகிறது. அதற்கு மட்டுமே அனுமதியும் வழங்கப்படுகிறது.

விளம்பரம்

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *