Sports

'ஃபீனிக்ஸ்' ஆர்சிபி – எலிமினேஷனில் இருந்து 'ப்ளே ஆஃப்' பாதைக்கு திரும்பியது எப்படி? | ஐபிஎல் 2024 இல் நீக்கப்பட்டதிலிருந்து RCB வெற்றிப் பாதைக்குத் திரும்புகிறது

'ஃபீனிக்ஸ்' ஆர்சிபி – எலிமினேஷனில் இருந்து 'ப்ளே ஆஃப்' பாதைக்கு திரும்பியது எப்படி?  |  ஐபிஎல் 2024 இல் நீக்கப்பட்டதிலிருந்து RCB வெற்றிப் பாதைக்குத் திரும்புகிறது


பெங்களூரு: கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பிலே ஆஃப் வாய்ப்புக்கான ரேஸில் இருக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. 'ஈ சாலா கப் நம்தே' என அந்த அணியின் ரசிகர்கள் எப்போதும் சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது ஆர்சிபி அணியின் செயல்பாடு. அந்த அணி ஃபீனிக்ஸ் போல மீண்டும் 'ப்ளே ஆஃப்' வெற்றிப் பாதைக்கு திரும்பியது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் எட்டு போட்டிகளில், ஏழு தோல்வியை தழுவி இருந்தது ஆர்சிபி. கிட்டத்தட்ட முதல் சுற்றோடு ஆர்சிபி நடையை கட்டும் நிலை. அதன் காரணமாக அணியின் ஆடும் லெவன் தேர்வு, ஏலம் சார்ந்த செயல்பாடு, அணியின் பலம், பேட்டிங், பவுலிங் குறித்தெல்லாம் விமர்சனக் கணைகள் ஏவப்பட்டது. அனைத்து தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

ஆனால், தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று அதை தகர்த்தது டூப்ளசி தலைமையிலான ஆர்சிபி. டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான முக்கிய போட்டியில் சிறப்பாக இருந்தது. இந்த ஆட்டத்தை சீசனின் தொடக்கத்திலேயே வெளிப்படுத்தி இருக்கலாமே என்று ஒவ்வொரு ஆர்சிபி ரசிகரும் தங்கள் அணியை நோக்கி கேட்கத்தான் செய்கிறார்கள்.

தொடர் வெற்றிக்கான காரணம்? – அணியின் பேட்டிங் ஆர்டர் செட்டில் ஆகியுள்ளது இதற்கு முக்கிய காரணம். நடப்பு சீசனில் ஐந்து முறை 200+ ரன்களை ஆர்சிபி கடந்துள்ளது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஆட்டத்தில், முறையே 287 மற்றும் 222 ரன்களை விரட்டியது. இதில் ஹைதராபாத் உடன் 25 ரன்களிலும், கொல்கத்தாவுடன் 1 ரன்னிலும் தோல்வியை தழுவியது. இந்த இரு தோல்வியும் நிச்சயம் வலி கொடுத்திருக்கும். அதே நேரத்தில் அதில் ரன்கள் எடுத்தால், 'நம்மால் முடியும்' என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கும்.

தனியொரு வீரராக ரன் குவித்து வந்த விராட் கோலிக்கு துணையாக வில் ஜெக்ஸ், ரஜத் பட்டிதார் உள்ளிட்டோர் ஆடி வருகின்றனர். கேமரூன் கிரீன், தனது ஆல்ரவுண்டர் திறனை வெளிப்படுத்தி வருகிறார். வேகப்பந்து வீச்சில் சிராஜ் பந்தை ஸ்விங் செய்து வருகிறார். அவருக்கு ஃபெர்குசன் மற்றும் யஷ் தயாள் கைகொடுக்கின்றனர். கரண் சர்மா மற்றும் ஸ்வப்னில் சிங் என இருவரும் சுழற்பந்து வீச்சில் துல்லிய திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிஎஸ்கே உடன் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் ஆர்சிபி வெற்றி பெறுவது அவசியம். முக்கியமாக சிஎஸ்கே-வை விட ரன் ரேட்டில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. அப்போதுதான் பிலே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். வில் ஜேக்ஸ், இங்கிலாந்து அணியின் தொடருக்காக நாடு திரும்புகிறார். வைஷாக் விஜய்குமார் அல்சாரி ஜோசப் ஆகியோர், எதிர்பார்த்த வெளிப்படுத்தல் தவறி உள்ளனர். இந்த சவால்கள் அனைத்தையும் கடந்து வர ஆர்சிபி-யின் தொடர் வெற்றிகள் ஊக்கமாக அமையலாம்.

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *