Business

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி


ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் பிப்.3,2024ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளன.

புதிய வட்டி விகிதங்கள்

ஹெச்டிஎஃப்சி வங்கியானது சாதாரண மக்களுக்கு 4.75% முதல் 7.40% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 5.25% முதல் 7.90% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
அதன்படி, 7.40% மற்றும் 7.90% என்ற அதிகபட்ச வட்டி விகிதங்கள் ஒரு வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குக் கிடைக்கும்.

ஹெச்டிஎஃப்சி ஃபிக்ஸட் டெபாசிட் சாதாரண குடிமக்கள் வட்டி விகிதம்

ஃபிக்ஸட் டெபாசிட் நாள்கள் வட்டி விகிதம் % (ரூ.2 கோடிக்கும் மேல் ரூ.5 கோடிக்குள்) 
7-14 நாள்கள்  4.75%
15-29 நாள்கள் 4.75%
30-45 நாள்கள் 5.50%
46-60 நாள்கள் 5.75%
61-89 நாள்கள் 6.00%
90 நாள்கள்- 6 மாதத்துக்குள் 5.75%
6 மாதம் 1 நாள் முதல் 9 மாதத்துக்குள்  6.65%
9 மாதம் 1 நாள் முதல் 1 ஆண்டுக்குள் 6.75%
15 மாதம் முதல் 18 மாதம்  7.05%
18 மாதம் -21 மாதம் வரை 7.05%
21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் 7.05%
2 ஆண்டு 1 நாள் முதல் 3 ஆண்டுகள் 7.00%
3 ஆண்டு 1 நாள் முதல் 5 ஆண்டுகள் 7.00%
5 ஆண்டு 1 நாள் முதல் 10 ஆண்டுகள் 7.00%

மூத்தக் குடிமக்கள் வட்டி விகிதம்

மூத்த குடிமக்கள் 50 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.50% கூடுதல் வட்டி விகிதத்தை நிலையான வைப்புகளில் பெறுவார்கள். இந்த வட்டி விகிதங்கள் பிப்.3ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்தப் புதிய வட்டி விகிதத்தின்படி, 1 ஆண்டு முதல் 15 மாதங்கள் வரையிலான வட்டி விகிதங்களுக்கு மூத்தக் குடிமக்கள் 7.90 சதவீதம் வட்டி பெறுவார்கள்.
5 ஆண்டு 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும்.

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்

ஹெச்டிஎஃப்சி வங்கி, 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான 2 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு வழக்கமான குடிமக்களுக்கு 3% முதல் 7.20% வரை ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள், அக். 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *