Business

Vodafone Idea Shares: வோடஃபோன் ஐடியா பங்கை உடனே வாங்குங்க.. 40% லாபம் இருக்கு.. தரகு நிறுவனம் சொன்ன குட் நியூஸ்!

Vodafone Idea Shares: வோடஃபோன் ஐடியா பங்கை உடனே வாங்குங்க.. 40% லாபம் இருக்கு.. தரகு நிறுவனம் சொன்ன குட் நியூஸ்!


ஏஜிஆர் நிலுவைத் தொகையில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்காததை தொடர்ந்து நேற்று பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் அதிக விற்பனை அழுத்தத்தை சந்தித்ததோடு மட்டுமின்றி அதன் 52 வாரக் குறைந்த விலையான ரூ. 9.79-ஐ எட்டின. அதேசமயம் மாலை வர்த்தகநேர முடிவில் பங்கு விலை ரூ.10.52 உயர்வுடன் முடிவடைந்தன.
உலகளாவிய தரகு நிறுவனமான நுவாமாவின் கூற்றுப்படி, சுப்ரீம் கோர்ட் AGR நிலுவைத் தொகையை குறைத்ததால், Vodafone Idea பங்கு விலையில் எந்த ஏற்றமும் சந்தை ஏற்படவில்லை. எனவே, முந்தைய வாரத்தின் தொடக்கத்தில் இருந்ததைப் போலவே மீதமுள்ள அடிப்படைகள் இருப்பதால் டெலிகாம் பங்குகளில் குறிப்பிட்ட ஏற்றம் கண்டன.

வோடபோன் ஐடியாவிற்கு இந்திய அரசாங்கத்தின் (GoI) ஆதரவு உள்ளது, இது நிதி இடைவெளியை நிரப்ப போதுமானது என்று தரகு நிறுவனமான நுவமா தெரிவித்துள்ளது. வோடபோன் ஐடியாவின் மோசமான நிலை கடந்துவிட்டது என்றும், வோடபோன் ஐடியா பங்கு விலை நடுத்தர முதல் நீண்ட காலத்திற்கு ரூ.15ஐ தொடலாம் என்றும் நுவாமா கூறியுள்ளது.

அதாவது 40% வரை பங்கு விலை உயரலாம் என குட் நியூஸ் கூறியுள்ளது. வோடபோன் ஐடியா பங்குகள் தொடர்பான பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு அளித்த ஆலோசனை கொடுத்துள்ளது.

எனவே, அதன் தற்போதைய சந்தை விலையான ரூ.10.52 உடன் ஒப்பிடும்போது, வோடபோன் ஐடியாவின் பங்கு விலையில் 40 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் அடையும் என்று Nuvama கணித்துள்ளது.

பங்கு விலை வெள்ளி மாலை வர்த்தக முடிவில் 1.35% உயர்வுடன் ரூ.10.52 ஆக வர்த்தகமாகி உள்ளது. பங்கு விலை 52 வாரத்தில் அதிகபட்சமாக ரூ.19.18 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.9.79 ஆகவும் பதிவு செய்துள்ளது.

sip-ல் முதலீடு செய்து எப்படி லாபம் பார்க்கலாம்!

மறுப்பு: இக்கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை அடிப்படையாக வைத்து முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம்.

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *