கேப்டன்சி போதாமையுடன் ஆஷஸ் பற்றி பேசுகிறார் பென் ஸ்டோக்ஸ்? | பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் பற்றி கேப்டன்சி போதாதா?

கேப்டன்சி போதாமையுடன் ஆஷஸ் பற்றி பேசுகிறார் பென் ஸ்டோக்ஸ்? | பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் பற்றி கேப்டன்சி போதாதா?

நாட்டிங்காமில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளான நேற்று மேற்கு இந்திய தீவின் கடைசி ஜோடி 71 ரன்களை அடிக்க விட்டு லீட் எடுத்ததன் பின்னணியில் பென் ஸ்டோக்ஸின் மோசமான கேப்டன்சி உத்தியே இருந்தது என்பது தெளிவு. 11-ம் நம்பர் இடது கை வீரர் ஷமார் ஜோசப் மிக அருமையாக ஆடி 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசியது இங்கிலாந்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். அதுவும் ஒரு சிக்சர் நாட்டிங்காம் ஸ்டேடியத்தின் பவுண்டரியில் […]

Read More
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்: திருமண வதந்திக்கு ஷமி பதில் | டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொள்வதாக பரவிய வதந்திகளுக்கு முகமது ஷமி மௌனம் கலைத்தார்.

அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்: திருமண வதந்திக்கு ஷமி பதில் | டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொள்வதாக பரவிய வதந்திகளுக்கு முகமது ஷமி மௌனம் கலைத்தார்.

புதுடெல்லி: “சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.” என்று சானியா மிர்சா உடனான திருமண வதந்தி குறித்த செய்திகளுக்கு முகம்மது ஷமி பதில் அளித்துள்ளார். இதுகுறித்து முகம்மது ஷமி , “சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதுமாதிரியான அடிப்படை ஆதாரமற்ற விஷயங்களைப் பரப்பக்கூடாது. இந்தச் செய்தி மிகவும் விஷமத்தனமானது. யாரோ வேண்டுமென்றே இதைப் பரப்பியுள்ளனர் என நினைக்கிறேன். இப்படி பொய்யான செய்தியை பரப்பினால், நான் என்ன செய்வது?. என்னுடைய […]

Read More
பாரிஸ் ஒலிம்பிக்: மல்யுத்தத்தில் மல்லுக்கட்டும் இந்தியா | மல்யுத்தத்தில் பாரிஸ் ஒலிம்பிக் இந்தியா

பாரிஸ் ஒலிம்பிக்: மல்யுத்தத்தில் மல்லுக்கட்டும் இந்தியா | மல்யுத்தத்தில் பாரிஸ் ஒலிம்பிக் இந்தியா

ஒலிம்பிக் வரலாற்றில் ஆடவர் ஹாக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது. மல்யுத்தத்தில் இதுவரை இந்தியா 7 பதக்கங்கள் வென்றுள்ளது. 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மல்யுத்த விளையாட்டின் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவுக்காக முதன் முதலில் கஷாபா ஜாதவ் பதக்கம் வென்றார். இதன் பின்னர் அடுத்த பதக்கத்தை வெல்ல இந்தியா 56 வருடங்கள் காத்திருந்தது. 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 66 கிலோ எடைப் பிரிவில் சுஷில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். […]

Read More
“இம்முறை என் மீது அழுத்தம் அதிகம்” – பாரிஸ் ஒலிம்பிக் குறித்து நீரஜ் சோப்ரா | பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்த முறை நீரஜ் சோப்ராவுக்கு அழுத்தம் அதிகம்

“இம்முறை என் மீது அழுத்தம் அதிகம்” – பாரிஸ் ஒலிம்பிக் குறித்து நீரஜ் சோப்ரா | பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்த முறை நீரஜ் சோப்ராவுக்கு அழுத்தம் அதிகம்

புதுடெல்லி: ஒலிம்பிக்கில் இந்த முறை தன் மீது அழுத்தம் அதிகம் இருப்பதாக இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்படையாக தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கைகளில் ஒருவராக அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். “இந்த முறை என் மீது அழுத்தம் அதிகம் உள்ளது. ஏனெனில், பட்டத்தை நான் தக்கவைக்க வேண்டிய சூழலில் உள்ளேன். இதற்கு முன்பு இதே மாதிரியான அனுபவத்தை கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய […]

Read More
இங்கிலாந்தின் ஆணவத்தை அடக்கிய மே.ஐ.தீவுகளின் அதனேஸ், ஹாட்ஜ் | ENG vs WI: கவேம் ஹாட்ஜ், அலிக் அதானாஸ் மேற்கிந்தியத் தீவுகளை வழிநடத்துகிறார்கள்

இங்கிலாந்தின் ஆணவத்தை அடக்கிய மே.ஐ.தீவுகளின் அதனேஸ், ஹாட்ஜ் | ENG vs WI: கவேம் ஹாட்ஜ், அலிக் அதானாஸ் மேற்கிந்தியத் தீவுகளை வழிநடத்துகிறார்கள்

மே.இ.தீவுகள் அணிக்கு உரிய மதிப்பை அளிக்காமல் ஆஷஸ் தொடருக்கான சோதனைக்கூடமாக மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கையாளும் இங்கிலாந்து நேற்று மே.இ.தீவுகள் பிரமாதமாக ஆடி பென் ஸ்டோக்சின் உத்திகளுக்குத் தண்ணி காட்டப்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் மே.இ.தீவுகள் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கும் பென் ஸ்டோக்ஸுக்கும் காயமேற்பட்டது மே.இ.தீவுகளின் பதிலடி மட்டுமல்ல, மே.இ.தீவுகளின் ரன் ரேட்டும் தான். ஓவருக்கு 4.17 என்ற விகிதத்தில் ரன்களை அடித்து வருகின்றனர் மே.இ.தீவுகள். 2ம் நாள் ஆட்ட முடிவில் […]

Read More
பாட்மிண்டனில் வாய்ப்பு எப்படி? – ஹாட்ரிக்கை குறிவைக்கும் சிந்து | பாரிஸ் ஒலிம்பிக் | பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் சாதனையை இலக்காகக் கொண்ட பிவி சிந்து பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வாய்ப்பு

பாட்மிண்டனில் வாய்ப்பு எப்படி? – ஹாட்ரிக்கை குறிவைக்கும் சிந்து | பாரிஸ் ஒலிம்பிக் | பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் சாதனையை இலக்காகக் கொண்ட பிவி சிந்து பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வாய்ப்பு

1992-ம் ஆண்டு பார்சிலோனா ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் விளையாட்டு அறிமுகமானது. தொடர்ந்து 1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவு சேர்க்கப்பட்டது. அன்று முதல் பாட்மிண்டன் விளையாட்டு ஐந்து பிரிவுகளில் விளையாடப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டில் சீனா 20 தங்கம், 12 வெள்ளி மற்றும் 15 வெண்கலப் பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக இந்தோனேஷியா 8 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா ஒலிம்பிக்கில் இதுவரை […]

Read More
ஐஎம் நார்ம்ஸ் செஸ் தொடர்: சென்னையில் நாளை தொடக்கம் | ஐஎம் நார்ம்ஸ் செஸ் தொடர் சென்னையில் நாளை தொடங்குகிறது

ஐஎம் நார்ம்ஸ் செஸ் தொடர்: சென்னையில் நாளை தொடக்கம் | ஐஎம் நார்ம்ஸ் செஸ் தொடர் சென்னையில் நாளை தொடங்குகிறது

சென்னை: தமிழகத்தில் அதிக கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு செஸ் சங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக முதலில் சர்வதேச மாஸ்டர்களை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் ஐஎம் நார்ம்ஸ் தமிழ்நாடு குளோஸ்டு சர்க்யூட் செஸ் தொடர் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. 2023-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி வரை நடத்தப்பட்ட 20 தொடர்களின் வாயிலாக 2 பேர் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டம் […]

Read More
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது இந்தியா! | மகளிர் ஆசியக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது இந்தியா! | மகளிர் ஆசியக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது

தம்புலா: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகளில் இந்தியா வென்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தீப்தி சர்மா பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார். இலங்கையில் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது நேபாளம். இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டி தம்புலாவில் நடைபெற்றது. இதில் டாஸ் […]

Read More
சூரியகுமார் யாதவுக்கு கேப்டன்சி… – கம்பீரின் ஆரம்பம் நல்ல அறிகுறியா? | சூர்யகுமார் யாதவுக்கு கேப்டன்சி… – கம்பீரின் தொடக்கம் நல்ல அறிகுறியா?

சூரியகுமார் யாதவுக்கு கேப்டன்சி… – கம்பீரின் ஆரம்பம் நல்ல அறிகுறியா? | சூர்யகுமார் யாதவுக்கு கேப்டன்சி… – கம்பீரின் தொடக்கம் நல்ல அறிகுறியா?

இலங்கை தொடருக்கு கவுதம் கம்பீர் என்ற ஆக்ரோஷ கண்டிப்பு பயிற்சியாளர் தலைமையின் கீழ் டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி செல்கிறது. நியாயமாகப் பார்த்தால் 3 டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியாதான் கேப்டனாகியிருக்க வேண்டும். ஆனால் சூரியகுமார் யாதவ் கேப்டனாக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் கம்பீரருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம் என்று ஊகித்தறிய முடிகிறது. பாண்டியாவுக்கு வைஸ் கேப்டன்சியும் கொடுக்கப்படவில்லை. சூர்யாவுக்கு தலைமைத்துவ பதவி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஒருநாள் தொடருக்கு […]

Read More
பாரிஸ் ஒலிம்பிக்: தடகளத்தில் தடம் பதிக்குமா இந்தியா? | பாரிஸ் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியா சாதனை படைத்துள்ளது

பாரிஸ் ஒலிம்பிக்: தடகளத்தில் தடம் பதிக்குமா இந்தியா? | பாரிஸ் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியா சாதனை படைத்துள்ளது

33-வது ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் தடகளத்தில் இந்தியாவில் இருந்து 29 பேர் கொண்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆடவருக்கான ஈட்டி எறிதலில் நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் களமிறங்குகிறார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் இந்தியா இதுவரை 3 பதக்கங்களே வென்றுள்ளது. 1900-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவின் நார்மன் பிரிட்சார்ட் 200 மீட்டர் ஓட்டம், 200 […]

Read More