Business

PVR Inox Results: ரூ.130 கோடி நஷ்டம் அடைந்த பிவிஆர் ஐநாக்ஸ்… இனிவரும் நாட்களில் மீண்டு வருமா? – pvr inox q4 results, company loss rs.130 cr

PVR Inox Results: ரூ.130 கோடி நஷ்டம் அடைந்த பிவிஆர் ஐநாக்ஸ்… இனிவரும் நாட்களில் மீண்டு வருமா? – pvr inox q4 results, company loss rs.130 cr


2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் மல்டிபிளக்ஸ் பிவிஆர் ஐநாக்ஸ் ரூ.130 கோடி இழப்பு சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நஷ்டம் முந்தைய ஆண்டில் ரூ.333 கோடியாக இருந்தது. அதுவே 2023-24ம் நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் காலாண்டில் ரூ.13 கோடி லாபம் ஈட்டி இருந்தது.

நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் 10 சதவிகிதம் அதிகரித்து ரூ. 1,256 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,143 கோடியாக இருந்தது.

பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் முழு நிதியாண்டில், ரூ.32 கோடி நஷ்டம் அடைந்திருந்தது. இது 2023 நிதியாண்டில் ரூ.335 கோடியாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் வருவாய் ரூ.6,107 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.3,751 கோடியாக இருந்தது.

வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனடைப்புக்கு முந்தைய வருவாய் (EBITDA) மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் ரூ.35.20 கோடியாக இருந்தது. பிவிஆர் ஐநாக்ஸின் சராசரி டிக்கெட் விலை ரூ. 233 ஆகும். உணவு மற்றும் பானங்களுக்கு ஒருவர் சராசரியாக செலவிடப்படும் தொகை ரூ.129 ஆக உள்ளது.

ஜனவரி-மார்ச் காலாண்டில், 6 இடங்களில் 33 புதிய திரைகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது வரை பிவிஆர் ஐநாஸ் 112 நகரங்களில் 1,748 திரைகளுடன் 360 திரையரங்குகளுடன் இயங்கி வருகிறது.

முழு நிதியாண்டில், அதன் திரையரங்குகளின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 15.14 கோடியாக இருந்தது. இதன் சராசரி டிக்கெட் விலை ரூ. 259 ஆகும். 2023-24 நிதியாண்டில் 25 அசெட்டுகளில் 130 புதிய திரைகள் தொடங்கப்பட்டன.

பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் தனது நிகர கடனை ரூ.136.40 கோடியாக குறைத்துள்ளது. பங்குச்சந்தை இயங்கும் நேரத்தில் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் என் எஸ் இ சந்தையில் பங்கின் விலை 0.94% சரிந்து ரூ 1,303.25 ஆக இருந்தது.

அதிக லாபம் தரும் SIP returns..எப்படி தொடங்குவது?

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *