Business

Pixel Play Credit Card,புதிய டிஜிட்டல் கிரெடிட் கார்டு அறிமுகம்.. HDFC வாடிக்கையாளர்கள் செம ஹேப்பி! – hdfc bank has launched a new digital credit card with various features

Pixel Play Credit Card,புதிய டிஜிட்டல் கிரெடிட் கார்டு அறிமுகம்.. HDFC வாடிக்கையாளர்கள் செம ஹேப்பி! – hdfc bank has launched a new digital credit card with various features


தனியார் துறை வங்கியான HDFC தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய டிஜிட்டல் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு Pixel Play கிரெடிட் கார்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப இந்த கார்டு மூலம் பயனடையலாம். நீங்கள் விரும்பும் கடையில் கேஷ்பேக் பெறலாம். கார்டின் வடிவமைப்பைத் தேர்ந்தெடுப்பதுடன் பில்லிங் சுழற்சியின் தேதியையும் தீர்மானிக்கலாம்.

சமயம் தமிழ்

Pixel Play கிரெடிட் கார்டுக்கு நீங்கள் PayZapp ஆப் மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது டிஜிட்டல் கிரெடிட் கார்டு கிடைக்கும். இந்த கார்டை PayZapp ஆப் மூலம் நிர்வகிக்கலாம். இதன் மூலம், நீங்கள் கார்டைத் பிளாக் செய்யலாம் அல்லது செயல்படுத்தலாம். வெகுமதி புள்ளிகள் குறித்தும் பார்க்கலாம். EMI குறித்த விவரங்களைப் பார்ப்பதோடு, கார்டு அறிக்கையைப் பதிவிறக்கம் செய்யலாம். கிரெடிட் கார்டு பில் செலுத்தலாம். பரிவர்த்தனை குறித்த விவரங்களையும் நீங்கள் பார்க்கலாம். இதுபோன்ற நிறைய அம்சங்கள் இந்த கார்டில் உள்ளன.

இந்த கிரெடிட் கார்டு முற்றிலும் டிஜிட்டல் வடிவில் ஆனது. அதை வழங்குவதற்கு ஆவணங்கள், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்பு என எதுவும் தேவையில்லை. PayZap செயலியில் இருந்து EMI ஆக மாற்றலாம். அதே செயலியில் நீங்கள் EMI தொகையை மீண்டும் செலுத்தலாம். முதலில் PayZap செயலியைப் பதிவிறக்கம் செய்து உள்ளே சென்றதும் ‘Apply now for Pixel Play’ என்ற விருப்பத்தில் செல்ல வேண்டும்.


இந்த கார்டில் ஏதேனும் இரண்டு வகைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் 5 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம். இதில், டைனிங் மற்றும் என்டர்டெயின்மென்ட், டிராவல், மளிகை வகை, எலக்ட்ரானிக்ஸ் வகை (குரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல்), ஃபேஷன் வகை (நைகா மற்றும் மைந்த்ரா) ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இ-காமர்ஸ் வணிகர்களுக்கு 3 சதவீத கேஷ்பேக் மற்றும் இதர செலவுகளுக்கு 1 சதவீதம் கேஷ் பேக் கிடைக்கும்.

Pixel Play கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டாலும், உங்கள் கார்டை யாராவது தவறாகப் பயன்படுத்தினாலும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. வங்கியின் கால் சென்டரை அழைத்து கார்டு தொலைந்து போனது குறித்து தெரிவிக்க வேண்டும். இதற்குப் பிறகு, கார்டை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் அதற்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள். கேஷ்பேக் புள்ளிகளைப் பெற PayZapp செயலியின் முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘Rewards’ என்ற பிரிவில் இருந்து கேஷ்பேக்கை நிர்வகிக்கலாம். இதுபோன்ற நிறைய அம்சங்கள் இந்த கார்டில் உள்ளன. இந்த கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *