Business

Nanayam Vikatan – 29 September 2024 பயன் அடையும் துறைகள், பலன் தரும் பங்குகள்! | crude oil price fall to reflect in share investment

Nanayam Vikatan – 29 September 2024 
பயன் அடையும் துறைகள், பலன் தரும் பங்குகள்! | crude oil price fall to reflect in share investment


தங்கத்துக்கு அடுத்த படியாக உலக நாடுகள் அதிதீவிரமாகத் தேடும் கமாடிட்டி எது எனில், அது கச்சா எண்ணெய் தான். நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களை ஒரே ஒரு நாள் மூடினால், அன்றைய தினம் மொத்த நாடுமே ஸ்தம்பித்து போய்விடும். அந்தளவுக்குக் கச்சா எண்ணெய் நம் அன்றாட வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறியிருக்கிறது.

கச்சா எண்ணெயின் விலைப் போக்கு…

கச்சா எண்ணெய் (Brent crude) விலை நகர்வின் வரலாற்றைப் பார்த்தோ மானால், 2008 ஜூன் மாதத்தில் அதி உச்ச விலையை எட்டியது. அதாவது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் கிட்டத் தட்ட 140 டாலரை எட்டியது. அதன் பிறகு, 2011 ஏப்ரலிலும், 2022 மே மாதத் திலும் 112 டாலர் என்ற நிலையை அடைந்தது. அதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்துவந்தது.

இந்த நிலையில், 2024-ம் ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்றத்தின் போக்கு காணப்பட்டது. 2024 ஏப்ரலில் 91 டாலருக்கு வர்த்தகமானது. அதன் பிறகு, கச்சா எண்ணெய் இறக்கத்தின் போக்கில் சென்றுகொண்டிருக்கிறது. அதிகபட்சமாக 68.7 டாலர் என்கிற நிலை வரை இறங்கிய கச்சா எண்ணெய், தற்போது சற்று ஏற்றம் கண்டு 73 டாலர் என்ற நிலையில் உள்ளது.

இப்படி கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை சரிந்துவருவதற்குப் பின்னால் இருக்கும் காரணிகளையும், அதனால் பொருளாதாரத்தில் மற்றும் பங்குச் சந்தையில் என்ன சாதக பாதகங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன என்பது பற்றியும் முதலீட்டுக்களம் யூடியூப் தளத்தின் நிறுவனர் மற்றும் ஐதாட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் சி.ஐ.ஓ எனும் பொறுப்பில் இருக்கும் ஷியாம் சேகரிடம் கேட்டபோது, விரிவாகவே விளக்கமளித்தார்…



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *