Business

March Car Sales,கார் விற்பனையில் கலக்கிய ஹூண்டாய் நிறுவனம்.. ஏற்றுமதியும் உயர்வு! – hyundai india has set a record by selling over 65,000 cars in march 2024

March Car Sales,கார் விற்பனையில் கலக்கிய ஹூண்டாய் நிறுவனம்.. ஏற்றுமதியும் உயர்வு! – hyundai india has set a record by selling over 65,000 cars in march 2024


மார்ச் மாதம் முடிந்துள்ள நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய வாகன உற்பத்தி மற்றும் விற்பனை விவரங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, தனது விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024 மார்ச் மாதத்தில் 7 சதவீத வளர்ச்சியுடன் மொத்தம் 65,601 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் 2023 மார்ச் மாதத்தில் 61,500 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

சமயம் தமிழ்

கடந்த மார்ச் மாதம் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் உள்நாட்டு விற்பனை மட்டும் 5 சதவீதம் உயர்ந்து 53,001 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது ஒரு வருடத்திற்கு முன்பு 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 50,600 யூனிட்களாக இருந்தது. அதேபோல, ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், 2024 மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 16 சதவீதம் அதிகரித்து 12,600 யூனிட்களாக இருந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 10,900 யூனிட்களாக இருந்தது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 2023-24 நிதியாண்டில் 7,77,876 கார்களை மொத்தமாக விற்பனை செய்துள்ளது. இது இந்நிறுவனத்தின் அதிகபட்ச விற்பனையாகும். அதாவது, இதற்கு முன்னர் எந்த நிதியாண்டிலும் இவ்வளவு கார்கள் விற்பனையாகவில்லை. முன்னதாக, 2022-23 நிதியாண்டில் 7,20,565 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், 2023-24 நிதியாண்டில் விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

வேலைக்கு போகலைனாலும் மாதம் ரூ.5000 வரும்..

2022-23 நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட 1,53,019 கார்களுடன் ஒப்பிடுகையில், 2023-24 நிதியாண்டில் 7 சதவீதம் அதிகரித்து 1,63,155 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *