Sports

Jasprit Bumrah,'3ஆவது டெஸ்ட்'.. பும்ரா, முகேஷ் விலகல்: மாற்று பவுலர்கள் இவங்கதான்: பிசிசிஐ அதிர்ச்சி அறிவிப்பு! – இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்

Jasprit Bumrah,'3ஆவது டெஸ்ட்'.. பும்ரா, முகேஷ் விலகல்: மாற்று பவுலர்கள் இவங்கதான்: பிசிசிஐ அதிர்ச்சி அறிவிப்பு!  – இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்


இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜஸ்பரீத் பும்ரா 32 ஓவர் வீசி, 91 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்களை கைப்பற்றினார். இவரது பந்துவீச்சு ஆட்டத்தையே மாற்றி, இந்தியாவுக்கு 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததால், ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

சமயம் தமிழ் இந்திய அணி

பும்ராவுக்கு ஓய்வு:

இந்நிலையில், பிப்ரவரி 15ஆம் தேதி, ராஜ்கோட்டில் துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், பும்ரா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவுக்கு காயம் எதுவும் இல்லை. ஓய்வுக்காக மட்டுமே நீக்கப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், இரண்டாவது டெஸ்டில் படுமோசமாக சொதப்பிய முகேஷ் குமாருக்கு, அடுத்தடுத்து டெஸ்டில் வாய்ப்பு கொடுக்க முடியாத நிலை உள்ளது.

மாற்று யார்?

இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, ​​ஓய்வுக்கு சென்ற முகமது சிராஜ், மூன்றாவது டெஸ்டில் பும்ராவுக்கு மாற்றாக விளையாடுவார். முகேஷ் குமாருக்கு மாற்றாக ஆவேஷ் கான் சேர்க்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முகமது ஷமி இல்லாத காரணத்தினால் பும்ரா, சிராஜ் இருவரும் தொடர்ந்து பந்துவீச வேண்டிய கட்டாயம் இருந்தது. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கூட, இவர்கள் இருவரை நம்பிதான் இந்திய அணி இருந்தது. தொடர்ந்து விளையாடி வருவதால்தான், இவர்களுக்கு மாறிமாறி ஓய்வு கொடுக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.


ஷமி விளையாடுவாரா?

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு, காலில் காயம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றுள்ளார். ஐபிஎலுக்கு முன் அவர் பிட்னஸை எட்ட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ரவீந்திர ஜடேஜாவுக்கும் முதல் டெஸ்டின்போது காயம் ஏற்பட்டது. அவர் கடைசி டெஸ்டில் மட்டுமே விளையாட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுவதால், அவர் ஐபிஎலில் தான் கம்பேக் கொடுப்பார் எனத் தெரிகிறது.

விராட் கோலி நிலைமை என்ன?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, விரைவில் இரண்டாவது குழந்தைக்கு தந்தை ஆகப் போவதால், அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. கடைசி மூன்று போட்டிகளுக்கான அணியை, இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோலி இன்னும் எந்த உறுதியான பதிலையும் அறிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கடைசி மூன்று போட்டிகளிலும் கோலி பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *