Business

itc: ITC Share Price: கிடுகிடுவென சரிந்த ஐடிசி பங்கு விலை…. காரணம் என்ன? – itc share price down

itc: ITC Share Price: கிடுகிடுவென சரிந்த ஐடிசி பங்கு விலை…. காரணம் என்ன? – itc share price down


| Updated: 8 Feb 2024, 3:17 pm

பிப்ரவரி 8ம் தேதியான இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி பங்கின் விலை 4 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது. ஏனெனில் அதன் மிகப்பெரிய பங்குதாரரான சிகரெட்-டு-ஹோட்டல் குழுமத்தில் தனது பங்குகளில் சிலவற்றை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாக்கோ (BAT) இந்தியாவின் சிகரெட்-டு-ஹோட்டல் குழுமத்தில் அதன் பங்குகளில் சிலவற்றை விற்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து வியாழன் வர்த்தகத்தில் ஐடிசி பங்கின் விலை வீழ்ச்சி அடைய தொடங்கியுள்ளது. BAT ஐடிசி நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் ஆகும்.

பிப்ரவரி 8ம் தேதியான இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி பங்கின் விலை 4 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது. ஏனெனில் அதன் மிகப்பெரிய பங்குதாரரான சிகரெட்-டு-ஹோட்டல் குழுமத்தில் தனது பங்குகளில் சிலவற்றை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ITC share - et tamil

பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாக்கோ (BAT) இந்தியாவின் சிகரெட்-டு-ஹோட்டல் குழுமத்தில் அதன் பங்குகளில் சிலவற்றை விற்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து வியாழன் வர்த்தகத்தில் ஐடிசி பங்கின் விலை வீழ்ச்சி அடைய தொடங்கியுள்ளது. BAT ஐடிசி நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் ஆகும்.

ஐடிசி நிறுவனம் பங்குகளில் சிலவற்றைப் பணமாக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கான விதிமுறைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. விரைவில் இது செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஏடி 1900ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஐடிசியில் பங்குதாரராக இருந்து வருகிறது.

பிஏடி-யின் இந்த முடிவினால் ஐடிசி பங்கின் விலை ரூ.431.90 என்ற நிலையிலிருந்து 4.15 சதவீதம் சரிந்து ரூ.414 என்ற நிலையை அடைந்தது. ஐடிசி நிறுவனத்தின் பங்குகளில் பிஏடி 2022ம் ஆண்டு நிலவரப்படி 29.19 சதவிகிதமாக இருந்தது. ஆனால் 2023ம் ஆண்டு 29.02 சதவீதமாகக் குறைந்துள்ளது.கொரோனாவுக்கு பின் பங்கின் விலை 19.8 சதவிகிதம் அதிகரித்து 616 மில்லியன் பவுண்டுகள் என்று வெளிநாட்டு நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.ஐடிசியின் மூன்றாம் காலாண்டு லாபம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் 10.8 சதவீதம் உயர்ந்து ரூ.5,572 கோடியாக இருந்தது. செயல்பாடுகளின் வருவாய் 2 சதவீதம் உயர்ந்து ரூ.17,665 கோடியாக இருந்தது, சிகரெட் வணிகம் 3.6 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.ஐடிசி ஹோட்டல் வணிகம், ஒரு தனி நிறுவனமாக பிரிக்கப்பட உள்ளது. உள்நாட்டு சுற்றுலாவில் வலுவான மறுமலர்ச்சி மற்றும் பெருநிறுவன முன்பதிவுகளின் அதிகரித்த தேவை ஆகியவற்றின் பின்னணியில், காலாண்டில் வருவாய் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.பிற்பகல் 1:40 மணியளவில், ஐடிசி பங்குகள் பிஎஸ்இயில் 4.16% குறைந்து ரூ.413.95 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

அனைவருக்கும் கைகொடுக்கும் அருமையான பென்ஷன் திட்டம்..



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *