Business

Indian stock market | அமெரிக்க வட்டி குறைப்பின் எதிரொலி… புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தை!

Indian stock market | அமெரிக்க வட்டி குறைப்பின் எதிரொலி… புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தை!


அமெரிக்காவில் கடன்கள் மீதான வட்டி விகிதம் அரை விழுக்காடு குறைக்கப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம் தொட்டன. அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.

அமெரிக்காவில் பெருந்தொற்று காலகட்டத்துக்கு பிறகு பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன் விகிதங்கள் அதிகளவு உயர்த்தப்பட்டு 5 புள்ளி 50 விழுக்காடாக இருந்தது. பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து அமெரிக்காவில் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை குறைத்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் புதன்கிழமை இரவு அறிவிப்பை வெளியிட்டது.

விளம்பரம்

இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட் முதலீடுகள் அதிகரித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 820 புள்ளிகள் வரை உயர்ந்து 83 ஆயிரத்து 773 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டன. இதேபோல், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 231 புள்ளிகள் வரை உயர்ந்து 25 ஆயிரத்து 609 புள்ளிகள் என்ற அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியது.

Also Read:
Weather update | தமிழகத்தில் 25-ம் தேதி வரை இப்படித்தான் இருக்கும்… வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

விளம்பரம்

இந்திய பங்குச் சந்தைகள் உயர காரணம்:

இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட டெக் நிறுவன பங்குகள் ஒன்றரை விழுக்காடு ஏற்றம் கண்டதே இந்திய பங்குச் சந்தைகள் உயர முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பங்குச் சந்தைகளில் ஏற்றம் ஏற்பட்ட நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 825 ரூபாயாகவும், ஒரு சவரன் 54 ஆயிரத்து 600 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 96 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *