Business

Icici bank:எதிர்பார்ப்பை மிஞ்சிய ஐசிஐசிஐ வங்கி…. முதல் காலாண்டிலேயே அசத்தல் லாபம்…

Icici bank:எதிர்பார்ப்பை மிஞ்சிய ஐசிஐசிஐ வங்கி…. முதல் காலாண்டிலேயே அசத்தல் லாபம்…


தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.11,059.1 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது 14.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.9,648.2 கோடியாக இருந்தது. 7 தரகு நிறுவனங்கள் கணித்தை விட ஐசிஐசிஐ வங்கியின் லாபம் அதிகரித்துள்ளது.

வங்கியின் நிகர வட்டி வருமானம் 7.3 சதவிகிதம் உயர்ந்து ரூ. 19,552.9 கோடியாக உள்ளது. சந்தை எதிர்பார்ப்புகளை விட அதிகரித்துள்ளது.

அதேபோல் ஐசிஐசிஐ வங்கியின் நிகர வாராக்கடன் 2.15 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடுகையில் வங்கியின் நிகர வாராக்கடன் வெகுவாக குறைந்துள்ளது. ஜூலை 26 அன்று பிஎஸ்இ சந்தையில் வங்கியின் பங்கு விலை 0.81 சதவீதம் உயர்ந்து ரூ.1207.70க்கு வர்த்தகம் முடிந்தது.

ஐசிஐசிஐ வங்கியின் முதல் காலாண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் ஆண்டு அடிப்படையில் 3.1 சதவீதம் அதிகரித்து ரூ.1,332.2 கோடியாக அதிகரித்துள்ளது. காலாண்டு அடிப்படையில், ஒதுக்கீடுகள் 85.4 சதவீதம் அதிகரித்தன.

ஐசிஐசிஐ வங்கியின் மொத்த கடன் வளர்ச்சி ஆண்டுக்கு 15.7% மாகவும், தொடர்ச்சியாக 3.3% அதிகரித்து உள்ளது. அதாவது ரூ.12,23,154 கோடியாக இருந்தது. சில்லறை கடன் போர்ட்ஃபோலியோ ஆண்டுக்கு 17.1% மற்றும் தொடர்ச்சியாக 2.4% வளர்ந்தது மொத்த கடன் வளர்ச்சி 54.4%மாக உள்ளது.

இந்த காலாண்டில், ஐசிஐசிஐ வங்கி அதன் சராசரி வைப்புத்தொகை ஜூன் காலாண்டின் முடிவில் 17.8% ஆண்டு வளர்ச்சியடைந்து ரூ 13,78,658 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் சராசரி நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு விகிதம் 39.6% ஆக இருந்தது.

முதல் காலாண்டில் 64 கிளைகள் கூடுதலாக திறக்கப்பட்டதை அடுத்து தற்போது ஐசிஐசிஐ வங்கி ஜூன் இறுதியில் 6,587 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் 17,102 ஏடிஎம்களையும் கொண்டுள்ளது. ஜூலை 26ம் தேதி ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலை 0.78 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,207.20 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது. காலாண்டு முடிவு சிறப்பாக அமைந்துள்ளதை அடுத்து இனி வரும் நாட்களில் பங்கு விலை உயர வாய்ப்புள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு பட்டா உண்டா?

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *