Business

How to take Gold Loan from Bank in india |எதிர்காலத்தில் வங்கிகளில் தங்கநகைக் கடன் வாங்கும் எண்ணம் உள்ளதா ? இதைப் படியுங்கள் முதலில்!

How to take Gold Loan from Bank in india |எதிர்காலத்தில் வங்கிகளில் தங்கநகைக் கடன் வாங்கும் எண்ணம் உள்ளதா ? இதைப் படியுங்கள் முதலில்!


How to take Gold Loan from Bank in india

How to take Gold Loan from Bank in india 

பொதுவாக வங்கிகளில் அடமானம் சார்ந்த கடன்களுக்கு (secured loans) வட்டி விகிதம் குறைவு. ஏனென்றால், அவற்றில் வங்கிகளுக்கு அடமானத்தைக் கொண்டு, பணத்தை மீட்க வழியுள்ளது. எனவே, உங்களுக்கு எதிர்காலத்தில் தங்கநகைக் கடன் வாங்கும் எண்ணம் இருந்தால், தங்க நகைகளாக வைத்திருங்கள். தங்க கட்டிகள், தங்க நாணயங்கள் போன்றவற்றை வங்கிகள் தங்கநகைக் கடனுக்கு ஏற்றுக் கொள்வதில்லை. 

சில காரணங்களால் வங்கிகள் தங்க நாணயங்கள், தங்க கட்டிகள் போன்றவற்றை அடமானமாக ஏற்பதில்லை.

  • தங்க நாணயங்களின் சுத்தத்தை கண்டுபிடிப்பது கடினம்.

  • தங்க நாணயங்களின் எடை மற்றும் கொள்ளவுக்கான விகுதியினை(Weight to volume ratio), கண்டுபிடிப்பது கடினம். ஏமாறுவதற்கு வாய்ப்புண்டு.

  • தங்க நாணயங்கள் கருப்பு பணத்தினை பதுக்குவதற்கு ஒரு முகாந்திரமாக உள்ளன.

  • தங்க நாணயங்களின் மீது, தங்க நகைகள் போன்று மக்களுக்கு மனோதத்துவ ரீதியாக (sentimental value) மீட்கும் எண்ணம் குறைவு. எனவே, தங்கநகைக் கடன் அடைக்கப்படாமல் போக வாய்ப்புண்டு.

  • தங்கத்தினை ஒரு சரக்காகக் கொண்டு, அதன் மீது சூதாட்டம் போன்றவை நடைபெறுவதால், தங்கக் கடன் பொதுவாக, சில்லறை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தங்க நகையினை அவர்கள் அடமானம் வைத்தே கடன் பெற வேண்டும்.

  • தங்கத்தினை அளவாகக் கொண்ட (Bullion) தங்க நாணயங்கள், தங்கக்கட்டி போன்றவற்றில் கடன் பெறுவதை பாரத ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது.

  • நாட்டில் தங்கம் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பிரச்சனையாக உள்ளது. தங்கத்தினை மக்கள் நாணயமாக வாங்குவதை குறைப்பதற்காக, தங்க நகைகளுக்கு மட்டுமே, தங்க நகைக் கடன் கொடுக்கப்படுகிறது. எனவே, ஏற்கனவே நாட்டில் இருக்கும் தங்கம் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

நிற்க. பாரத ரிசர்வ் வங்கி விதிகளின் படி 50 கிராம் வரை வங்கிகள் விற்ற தங்க நாணயங்களுக்கு தங்க நகைக் கடன் வழங்கலாம். அவற்றிலும் கூட, எடை சற்றுக் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளபடியால், 50 கிராமுக்கு குறைவாக உள்ள தங்க நாணயங்களுக்கு மட்டுமே அடமானக் கடன் வழங்கப்படும்.

எனவே, உங்களுக்கு எதிர்காலத்தில் தங்கநகைக் கடன் வாங்கும் எண்ணம் இருந்தால், தங்க நகைகளாக அல்லது வங்கியின் தங்க நாணயங்களாக வைத்திருங்கள். அவசரத் தேவைக்கு தங்கக் கடன் பெற அவை உதவும். மற்ற வகை தங்கங்களான, தங்கக் கட்டி, வங்கியில் வாங்காத தங்க நாணயங்களைத் தவிருங்கள்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *