Business

Hero நிறுவனத்தின் புதிய மொடல் Scooter அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரம்

Hero நிறுவனத்தின் புதிய மொடல் Scooter அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரம்


Hero MotoCorp நிறுவனம் அறிமுகம் செய்த புதிய மொடல் Scooter பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.



இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர் மொடல்களில் Hero Pleasure Plus Xtec ஒன்றாகும். இந்த மொடலில் தற்போது ஸ்போர்ட்ஸ் (Sports) என்னும் புதிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.

Hero Pleasure Plus Xtec Sports

Hero நிறுவனம் அறிமுகம் செய்த Hero Pleasure Plus Xtec Sports scooter -க்கு ரூ.79,738 விலை (Delhi Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



இந்த ஸ்கூட்டரானது வழக்கமான தேர்வுகளில் இருந்து மாறுபட்டுள்ளது. குறிப்பாக அப்ராக்ஸ் ஆரஞ்சு மற்றும் நீல நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.



அதனுடன் side panels -களில் 18 என்கிற நம்பரும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நம்பரானது முன்பு apron மற்றும் fender -களிலும் காண முடிகின்றது. தற்போது, இதிலும் சேர்க்கப்பட்டிருப்பது கூடுதல் அழகை சேக்கும் வகையில் உள்ளது.



இந்த ஸ்கூட்டரில் 110.9 cc single-cylinder பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8 bhp பவரையும், 8.7 Nm டார்க் வெளியேற்றும் திறனையும் கொண்டுள்ளது. அதோடு, நவீன கால சிறப்பம்சங்களும் இதில் உள்ளன.



மேலும், நடுத்தர டிஜிட்டல் திறன் மற்றும் Bluetooth connection கொண்ட LCD screen இருப்பதால் செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை அறிந்து கொள்ள உதவும்.

அதோடு, Projector type LED headlight இருப்பதால் அதிக வெளிச்சத்தை வழங்கும்.

இந்த ஸ்கூட்டரானது TVS Jupiter, Honda Activa, Duo ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *