Business

bank of india: சிசிஐஎல் ஐஎஃப்எஸ்சியின் 6% பங்குகளை வாங்கிய பாங்க் ஆஃப் இந்தியா…. குஜராத் கிஃப்ட் சிட்டி வளர்ச்சி உதவும் என தகவல்… – bank of india buying 6.1% stake on ccil ifsc

bank of india: சிசிஐஎல் ஐஎஃப்எஸ்சியின் 6% பங்குகளை வாங்கிய பாங்க் ஆஃப் இந்தியா…. குஜராத் கிஃப்ட் சிட்டி வளர்ச்சி உதவும் என தகவல்… – bank of india buying 6.1% stake on ccil ifsc


குஜராத்தில் உள்ள கிஃப்டி SEZல் பட்டியலிடப்பட்ட,கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 6.125 சதவீத பங்குகளை பாங்க் ஆஃப் இந்தியா வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

திங்கள் கிழமை அன்று கிஃப்ட் சிட்டியின் வங்கியின் IFSC வங்கிப் பிரிவு திறக்கப்பட்டதை ஒட்டி நடைபெற்ற விழாவில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் நிர்வாக இயக்குநர் சுப்ரத் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சிசிஐஎல் ஐஎஃப்எஸ்சியில் 6.125 சதவீதப் பங்குகளை ரூ.6.125 கோடிக்கு வாங்குவது, கிஃப்ட் சிட்டி ஐஎஃப்எஸ்சியின் வளர்ச்சி உதவும் என அவர் தெரிவித்தார்.

க்ளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மூலம் புரோமோட் செய்யபப்ட்ட CCIL IFSC ஆனது கிஃப்ட் சிட்டி நிகழ்நேர வெளிநாட்டு நாணய தீர்வு முறையை உருவாக்க மற்றும் செயல்படுத்த முன்மொழியப்பட்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் GIFT சிட்டியில் ஒரு கிளியரிங் ஹவுஸ் மற்றும் சிஸ்டம் ஆபரேட்டராக செயல்படும்.

கடந்த ஆண்டு கிஃப்ட் சிட்டியில் ஐ எஃப் சி எஸ் வங்கிப் பிரிவைத் தொடங்கி வைக்கும் போது, வங்கி அதன் முதல் ஆண்டில் $1 பில்லியன் வணிகத்தைத் தொடும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2024ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி IBU $1 பில்லியன் இலக்கை தாண்டியது. இந்த நிதியாண்டில், IBU முந்தைய ஆண்டை விட 50 சதவீத வணிக வளர்ச்சியை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது.

IFSCA வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்பட்ட பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனை அடிப்படையிலான இணைய வங்கி வசதிகள் மூலம் டிஜிட்டல் வங்கி வசதிகளை வழங்குவதை வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது.

SIP என்றால் என்ன?SIP மிகப்பெரிய இலாபத்தை தருமா?

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *