Business

521 கிமீ ரேஞ்சு கொண்ட இந்த புதிய எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்படவிருக்கும் வசதிகள்

521 கிமீ ரேஞ்சு கொண்ட இந்த புதிய எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்படவிருக்கும் வசதிகள்


கியா EV9:

கியா EV9:

5,015 மிமீ நீளம், 1,980 மிமீ அகலம், 1,780 மிமீ உயரம் மற்றும் 3,100 மிமீ வீல்பேஸுடன் நல்ல இடவசதியுடைய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வெளியாகவிருக்கிறது புதிய கியா EV9. இந்த எலெக்ட்ரிக் காரை முழுமையாக இறக்குமதி செய்தே இந்தியாவில் விற்பனை செய்யவிருக்கிறது கியா. எனவே, அனைத்து வசதிகளையும் கொண்ட டாப் எண்டு GT Line வேரியன்ட் மட்டுமே இந்தியாவில் வெளியாகவிருக்கிறது.

அப்டேட் செய்யப்பட்ட புதிய கார்னிவல் மாடலைப் போலவே, இந்த எஸ்யூவி மாடலும் 6 சீட்டர் மாடலாகவே வெளியாகவிருக்கிறது. அப்படியென்றால் இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் சீட்கள் மட்டுமே.

ஸ்னோ வைட் பியர்ல், ஓஷன் ப்ளூ, பெப்பிள் கிரே, பேன்தெரா மெட்டல் மற்றும் ஆரோரா பிளாக் பியர்ஸ் ஆகிய ஐந்து நிறங்களில் இந்த EV9 காரை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். காரின் உட்புறமானது, வைட் மற்றும் பிளாக், ப்ரௌன் மற்றும் பிளாக் என இரண்டு டூயல் டோன் நிறங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. 20 இன்ச் அலாய் வீல்கள் ஸ்டாண்டர்டு.

கியா EV9: வசதிகள்

கியா EV9: வசதிகள்

வசதிகள் என்று பார்த்தால், டேஷ்போர்டில் 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, டூயல் எலெக்ட்ரிக் சன்ரூஃப், இரண்டாம் வரிசை கேப்டன் சீட்களுக்கு லெக் சப்போர்ட், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட்மன்ட், மஸாஜ் பங்ஷன், டிஜிட்டல் IRVM, 14 ஸ்பீக்கர்கள் கொண்ட மெரிடியன் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் கீ, எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஸ்டீயரிங் வீல், ஆறு USB டைப்-C சார்ஜிங் போர்ட்கள், த்ரீ ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இத்துடன் 10 ஏர்பேக்குகள், ABS, ESC, டவுன்ஹில் பிரேக் கண்ட்ரோல், VSM, முன்பக்க, பின்பக்க மற்றும் பக்கவாட்டு பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா மற்றும் ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், லேன் டிப்பர்சூர் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஹை பீம் அசிஸ்ட், லேன் கீப்பிங் அசிஸ்ட் உள்ளிட்ட இரண்டாம் நிலை ADAS ஆகிய பாதுகாப்பு வசதிகளும் EV9 மாடலில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கியா EV9: பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்

கியா EV9: பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்

இந்த சொகுசு எலெக்ட்ரிக் காரில் 99.8kWh என்ற பெரிய பேட்டரி பேக்கையே கொடுத்திருக்கிறது கியா. இந்த பேட்டரியானது 521 கிமீ ARAI ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. மேலும், இதனை DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் 24 நிமிடங்களில் 10-80% வரை சார்ஜ் செய்து விட முடியுமாம்.

இந்த எலெக்ட்ரிக் காரில் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் கூடிய டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பைக் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். இந்த செட்டப்பானது 384hp பவர் மற்றும் 700Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பின் உதவியுடன் மணிக்கு 100 கிமீ வேகத்தை வெறும் 5.3 நொடிகளில் எட்டும் திறனைக் கொண்டிருக்கிறது புதிய கியா EV9.

கியா EV9: விலை மற்றும் வெளியீடு

கியா EV9: விலை மற்றும் வெளியீடு

மேற்கூறியது போல, அக்டோபர் 3ம் தேதியன்று, இந்த EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் அப்டேட் செய்யப்பட்ட கார்னிவல் எம்பிவி ஆகிய இரண்டு மாடல்களையும் வெளியிடவிருக்கிறது கியா. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை சுமார் ரூ.1 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலையில் வெளியாகும் பட்சத்தில், இந்தக் காருக்கு நேரடிப் போட்டி என எந்த மாடலும் இல்லை. எனினும், இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மெர்சிடீஸ் EQE எஸ்யூவி, BMW iX மற்றும் ஆடி Q8 e-tron ஆகியவற்றுக்குப் போட்டியாக இந்த எலெக்ட்ரிக் EV9 வெளியாகிறது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *