Business

விரைவில் அறிமுகமாகும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட்… புதுசா என்னென்ன இருக்கு?

விரைவில் அறிமுகமாகும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட்… புதுசா என்னென்ன இருக்கு?


இந்தியாவில் நான்கு சக்கர வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. அந்தவகையில் இவர்களின் ஸ்விஃப்ட் ரக கார்களுக்கு சந்தையில் அதிக பங்கு உண்டு. இப்போது நிறுவனம் புதிய தலைமுறைக்கு ஏற்ற வகையில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரின் புதிய மாடலை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த வகையில், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது இந்த காரின் நான்காம் தலைமுறை மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காரின் டிசைனில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், எஞ்சின் திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்திய சாலைகளில் இந்த கார்கள் சோதனை முயற்சிக்காக களமிறப்பட்டுள்ளன. எனவே, மிக விரைவில் இந்திய வாடிக்கையாளர்களுக்காக இந்த கார் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்விஃப்ட் கார் வரவு குறித்த தகவலால் மோட்டார் வாகனச் சந்தை சூடுபிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்த மாடல் காரின் விற்பனை ஆகும். இந்த நேரத்தில் புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் குறித்து கிடைத்த கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

வரவிருக்கும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரில் இலகுவான கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை நிறுவனம் HEARTECT என்று அழைக்கிறது. இதனால் வாகனத்தின் செயல்திறன் அதிகரிக்கும் என்றும், அதே நேரத்தில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் புதிய மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்படுகிறது.

விளம்பரம்

இந்த எஞ்சினானது 82 பிஎச்பி பீக் பவரையும், 4,500 ஆர்பிஎம்மில் 112 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மேனுவல் மாடலில் 12.5 விநாடிகளிலும், சிவிடி வகையில் 1.9 வினாடிகளிலும் மணிநேரத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட முடியும். நான்காவது தலைமுறை மாருதி சுசுகி ஸ்விஃப்ட், 10 Ah லித்தியம்-அயன் பேட்டரி வாயிலாக இயக்கப்படும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

இதில் இணைக்கப்பட்டிருக்கும் 12V மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டமானது, ஒரு ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டரை (ISG) உள்ளடக்கியுள்ளது. இது புதிய ஸ்விஃப்ட்டுக்கான ஜெனரேட்டர் மற்றும் ஸ்டார்டர் மோட்டாராக செயல்படுகிறது. ISG ஆனது பெல்ட் மூலம் இயக்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் பிரேக்கிங் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், பிரேக் பிடிக்கும் சமயங்களில் ஏற்படும் உராய்வை திறனாக மாற்றி பேட்டரியை சார்ஜ் செய்கிறது.

விளம்பரம்

Also Read : கொளுத்தும் வெயிலில் கார்களை பராமரிக்க சில முக்கிய டிப்ஸ்!

ஐஎஸ்ஜி யூனிட் 2.3 kW பவரையும், 60 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த 12V மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டம் எடை குறைந்ததாகவும், காரின் மொத்த எடையில் ஏழு கிலோகிராம்களுக்கும் குறைவான எடையைக் கொண்டுள்ளதாகவும் மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. மாருதி கார்களில் முதன்முறையாக ADAS அம்சங்கள் புதிய ஸ்விஃப்ட் காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், எச்சரிக்கைகள், டிராபிக் விளக்குகளை அடையாளம் காணுதல், போக்குவரத்து எச்சரிக்கை போன்ற அம்சங்கள் இதில் அடங்கும். பிரீமியம் அம்சங்களான எல்இடி முகப்பு விளக்குகள், பகல் நேர அணையா விளக்குகள், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு, 16 இன்ச் அலாய் வீல்கள், கீலெஸ் எண்ட்ரி போன்றவை வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் காருடன் வழங்கப்படுகிறது.

விளம்பரம்

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • முதலில் வெளியிடப்பட்டது:



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *