National

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ‘அந்த’ செய்தி உண்மையில்லை… தமிழக அரசு விளக்கம்!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ‘அந்த’ செய்தி உண்மையில்லை… தமிழக அரசு விளக்கம்!


ரேசன் கடைகளில் கைரேகை சரிபார்ப்பை மேற்கொள்ளாத குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என்ற தகவலுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இம்மாத இறுதிக்குள் கைரேகையை புதுப்பிக்காவிட்டால், அவர்களது பெயர்கள் ரேசன் அட்டையில் இருந்து நீக்கப்படும் என செய்திகள் வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில், ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக கைரேகை புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
பயனாளிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அவர்கள் ஓய்வாக இருக்கும்போதோ, பொருட்கள் வாங்க கடைக்கு வரும்போது மட்டுமே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுவரை 63 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள பணிகளை தனி முகாம்கள் நடத்தியோ அல்லது வீட்டிற்கே சென்று புதுப்பித்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
சில நாளிதழ்களில் குறிப்பிட்டது போல் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படாது என விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு, கைரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படாது என்றும் கூறியுள்ளது.
அத்துடன், வெள்ளைத்தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதுமில்லை என்பதால், பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *