Business

மேம்பட்ட இன்ஜினுடன்.. அதிக பவருடன்.. வெளியாகும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210!

மேம்பட்ட இன்ஜினுடன்.. அதிக பவருடன்.. வெளியாகும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210!


புதிதாக அப்டேட் செய்யப்படும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடலை இந்தியாவின் உயரமான இடத்தில் சோதனை செய்து வருகிறது ஹீரோ. புதிய இன்ஜின் மற்றும் புதிய வசதிகளுடன் எக்ஸ்பல்ஸ் மாடல் அப்டேட் செய்யப்படவிருக்கிறது. புதிய எக்ஸ்பல்ஸ் மாடலானது முழுவதும் மூடப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்ட போது படமெடுக்கப்பட்டிருக்கிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210: இன்ஜின்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210: இன்ஜின்

தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்பல்ஸ் பைக்கில் 200 சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், புதிய எக்பல்ஸ் மாடலில் 210 சிசி இன்ஜினைப் பயன்படுத்தவிருக்கிறது ஹீரோ. இந்த இன்ஜினானது தற்போது அந்நிறுவனத்தின் கரிஷ்மா பைக்கிலும் பயன்பாட்டில் இருக்கிறது.

இந்த 210 சிசி, DOHC 4V லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜினானது, 25.15hp பவர் மற்றும் 20.4Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. ஹீரோ உருவாக்கியதிலேயே மிகவும் பவர்ஃபுல்லான இன்ஜின் இதுதான்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210: வசதிகள்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210: வசதிகள்

தற்போதைய பைக்கில் இல்லாத பல்வேறு மேம்பட்ட வசதிகளை புதிய 210 சிசி பைக்கில் ஹீரோ கொடுக்கவிருக்கிறது. முக்கியமாக ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், டூயல் சேனல் ABS,TFT டிஸ்பிளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் ஆகிய வசதிகளை புதிய எக்ஸ்பல்ஸ் மாடலில் நாம் எதிர்பார்க்கலாம்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 400?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 400?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடலை அப்டேட் செய்வது குறித்து இதுவரை ஹீரோ அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. புதிதாக 210 சிசி இன்ஜினை அந்த பைக்கிற்கு ஹீரோ கொடுக்கவிருக்கிறது என எதிர்பார்க்கப்பட்டாலும், மேவ்ரிக் 440 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 400 சிசி இன்ஜினைக் கொண்ட புதிய எக்ஸ்பல்ஸ் 400 மாடலை ஹீரோ வெளியிடுவதற்கான வாய்ப்புகளும் கணிசமான அளவு இருக்கின்றன. எனவே, ஹீரோ என்ன முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200:

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200:

தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் 19.1hp பவர் மற்றும் 17.35Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, 200 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சிங்கிள் சேனல் ABS வசதி கொண்ட இந்த எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலானது ரூ.1.47 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய எக்ஸ்பல்ஸ் மாடலானது எந்த வகையில் வந்தாலும், இதனை விடக் கூடுதல் விலையிலேயே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *