Business

முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய ஜியோமி… செடான் SU7 மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன?

முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய ஜியோமி… செடான் SU7 மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன?


ஜியோமி நிறுவனம் SU7 செடான் என்ற புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

  • 2 நிமிடம் படிக்கவும்
    | நியூஸ்18 தமிழ்
    தமிழ்நாடு
    கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

0107

ஒரு வழியாக அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த SU7 செடான் காரை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஜியோமி நிறுவனமும் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் இறங்கிவிட்டது. அதிநவீன தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் அமைந்த டிஸைன் என வாகனத் துறையில் ஜியோமின் அறிமுகம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

விளம்பரம்

0207

ஜியோமி SU7 காரில் உள்ள வசதிகள்: SU7 காரில் மேம்படுத்தப்பட்ட தானியங்கி ஓட்டுனர் வசதி உள்ளது. அதுமட்டுமின்றி சூழலுக்கு தகுந்தார்ப்போல் செயல்படும் BEV தொழில்நுட்பம், ரோட் மேப்பிங் ஃபவுண்டேஷன் மாடல் மற்றும் சூப்பர் ரெஸ் நெட்வொர்க் தொழில்நுட்பம் ஆகியவையும் உள்ளது. அதிக செயல்திறனுள்ள இரண்டு NVIDIA Orin சிப் பவரில் இயங்கும் இந்தக் காரில் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக LiDAR, அதிக தரமுள்ள 11 கேமராக்கள், மூன்று மில்லிமீட்டர் வேவ் ரேடார்கள் மற்றும் 12 அல்ட்ராசோனிக் ரேடார்கள் உள்ளது.

விளம்பரம்

0307

செடான் மாடல் காரான SU7, ஐந்து மீட்டர் நீளமும், இரண்டு மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இதன் வீல் பேஸ் 5 மீட்டர் ஆகும். நளினமான வடிவமைப்பையும் சிறப்பான செயல்பாட்டையும் இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காரின் உட்புறம் அதிக இடவசதியோடும் ஸ்டைலிஷாகவும் இருக்கிறது.

விளம்பரம்

0407

ஜியோமி SU7 சிறப்பம்சங்கள் :  220Kw திறனுள்ள பின்பக்க வீலில் இயங்கும் மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளதால் SU7 சிறந்த பெர்ஃபார்மன்ஸை கொண்டுள்ளது. இதன் எலெக்ட்ரிக் மோட்டாரான ஹைபர் இஞ்சின் V8 அதிகபட்சமாக 27,200 rpm-யை உருவாக்கி உலகளவில் புதிய சாதனையை படைத்துள்ளது. இதன் இழுவிசை அதிகபட்சமாக 635Nm என்ற அளவில் இருக்கிறது. இவ்வளவு அதிகமான பவர் இருப்பதால், 0-100kmph வேகத்தை அடைய வெறும் 5.3 நொடிகள் மட்டுமே ஆகிறது.

விளம்பரம்

0507

வேகம் மற்றும் ரேஞ்ச் : SU7 காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 265கி.மீ ஆகும். இதன் ரேஞ்சைப் பொறுத்தவரை, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 700 முதல் 900கி.மீ வரை தங்கு தடையின்றி செல்லலாம். ஆனால் காரின் மாடலைப் பொறுத்து இது மாறுபடும். SU7 ப்ரோ மாடல் 830கி.மீ வரை செல்லக்கூடும். அதுவே SU7 மேக்ஸ் மாடலாக இருந்தால் 900கி.மீ வரை செல்லக்கூடும்.

விளம்பரம்

0607

காரின் உட்புறம் மற்றும் கனெக்டிவிட்டி : எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு காரின் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பல திரைகள் கொண்ட காக்பிட் மற்றும் அதிநவீன வசதிகள் உள்ளது. ஜியோமியின் ஹைபர் OS-ல் இயங்குவதால், ஜியோமியின் போன் மற்றும் டேப்லெட்களோடு பிரச்னையில்லாமல் கனெக்ட் ஆகிறது. மேலும் 16.1 இன்ச் 3K கன்சோல், 7.1 இன்ச் சுற்றும் வகையிலான டாஷ்போர்டு, 56 இன்ச் HUD டிஸ்பிளேவும் உள்ளது.

விளம்பரம்

0707

விலை: மற்ற கார்களுக்கு கடுமையாக போட்டியளிக்கும் விதமாகவே SU7 காரின் விலையை நிர்ணயித்துள்ளது ஜியோமி. இதன் ஸ்டான்டர்டு வெர்ஷனின் விலை சீனாவில் 2,15,900 யுவானுக்கு விற்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.24 லட்சமாகும். அதேப்போல் ப்ரோ மற்றும் மேக்ஸ் வெர்ஷன் முறையே 2,45,900 மற்றும் 2,99,900 என்ற விலையில் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உகந்த பட்ஜெட்டில் உள்ள மாடல்களை வாங்கிக்கொள்ள முடியும்.

விளம்பரம்
  • முதலில் வெளியிடப்பட்டது:



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *