Sports

மர்ம நபர்களால் கடத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்.. பணம், போன், பேக் உள்ளிட்ட பொருட்களை திருட்டு

மர்ம நபர்களால் கடத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்.. பணம், போன், பேக் உள்ளிட்ட பொருட்களை திருட்டு


இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது உலகெங்கிலும் தற்போது டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தென்னாப்பிரிக்க நாட்டில் தற்போது தென்னாபிரிக்க டி20 லீக் தொடரானது இரண்டாவது சீசனாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த 28 வயதான பேபியன் ஆலன் அந்த தொடரில் பேர்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் ஜோகன்னஸ்பர்க்கில் தங்கும் விடுதிக்கு சென்றபோது திடீரென கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சம்பவத்தின் போது அவரை வழிமறித்த சில மர்ம நபர் அவர்கள் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்த பணம், செல்போன், டைரி மற்றும் பேக் போன்றவற்றை திருடிவிட்டு தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேவேளையில் அவருக்கு எந்த காயமோ, பாதிப்பையோ அவர்கள் ஏற்படுத்தவில்லை.

மேலும் இப்படி சர்வதேச டி20 லீக் போட்டியில் விளையாடும் வீரருக்கு பாதுகாப்பு இருந்தும் அவர்களை மீறி இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளத்தில் பலரும் விவாதிக்க ஆரம்பித்துள்ள வேளையில் மேற்கிந்திய தீவுகள் வாரியம் சார்பில் வெளியான ஒரு தகவல் :

பேபியன் ஆலனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றது உண்மைதான். அவரிடம் இருந்த பொருட்கள் பறிக்கப்பட்டுள்ளன. அதை தவிர்த்து அவருக்கு எந்த காயமோ, ஆபத்தோ ஏற்படவில்லை. இது குறித்த தகவல் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளது. அதோடு அவருக்கு துணையாக தற்போது அனைத்து உதவிகளும் செய்ய பேர்ல் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் துணைநிற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : 2வது போட்டி முடிந்தது.. அவசரமாக இந்தியாவை விட்டு வெளியேறிய இங்கிலாந்து அணியினர்.. காரணம் என்ன?

தற்போது அவருடன் எங்களது நாடு வீரர் மெக்காய் மற்றும் எங்களது தலைமை பயிற்சியாளரும் உள்ளனர். நடைபெற்று வரும் இந்த தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் பேர்ல் ராயல்ஸ் அணி நாளை பிப்ரவரி 7-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எலிமினேட்டர் போட்டியில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *