State

மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை: தமிழக நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் விசாரணைக்கு ஆஜர் | ED raid on sand quarries: Chief Engineer of TN Water Resources Department appears for investigation

மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை: தமிழக நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் விசாரணைக்கு ஆஜர் | ED raid on sand quarries: Chief Engineer of TN Water Resources Department appears for investigation


சென்னை: தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் அனுப்பிய சம்மன் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம்ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது. இந்தநிலையில், இதில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தினர். திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அனைத்து இடங்களிலும், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த இந்த சோதனையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம் சிக்கியதாக கூறப்பட்டது. இந்த சோதனைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், தமிழக நீர்வளத்துறையின் முதன்மை பொறியாளர் முத்தையா திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜரானார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளுக்கு ஒப்பந்தங்கள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது?, அவை எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது? தமிழகத்தில் எத்தனை குவாரிகளுக்கு மணல் அள்ளுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை இந்த விசாரணையின்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *