National

பைக்கை நிறுத்த முதலில் எதை அழுத்த வேண்டும்.. பிரேக்கா, கிளட்சா?

பைக்கை நிறுத்த முதலில் எதை அழுத்த வேண்டும்.. பிரேக்கா, கிளட்சா?


Bike | பைக் நன்றாக ஓட்ட தெரிந்தாலும் கூட பலருக்கு பிரேக் போடுவதில் புரிதல் இருக்காது. ஏனென்றால் யாரும் பைக் ஓட்டுவதற்கு பயிற்சிக்கு செல்வதில்லை. ஏற்கனவே ஓட்ட தெரிந்தவர்களிடமே பழகி கொள்வதால் இதில் உள்ள நுணுக்கங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  • 1-MIN READ
    | News18 Tamil
    Tamil Nadu
    Last Updated :

0106

இந்தியாவில் வாழும் அதிகமான மக்கள் சைக்கிளில் இருந்து தற்போது பைக்கிற்கு மாறியுள்ளனர். சிலர் கார் வைத்திருந்தாலும் கூட வீட்டிற்கு வீடு பைக் கட்டாயம் வைத்திருக்கிறார்கள். ஆனால் பலருக்கும் கிளட்ச், பிரேக் அல்லது கியர் ஆகியவற்றை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பது தெரியாது. இதனால் அவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறார்கள்.

விளம்பரம்

0206

திடீரென பிரேக் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், கிளட்ச் மற்றும் பிரேக் இரண்டையும் ஒரே நேரத்தில் அழுத்தலாம். கிளட்ச் மற்றும் பிரேக் பொதுவாக அவசர காலங்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது பைக்கின் இயந்திர பாகங்களை சேதப்படுத்தாமல் பிரேக்குகளைப் பயன்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும். இருப்பினும், பிரேக் போடும் போது மிகுந்த கவனம் தேவை.

விளம்பரம்

0306

பைக் அதிக வேகத்தில் இருந்தால், முதலில் பிரேக்கை அழுத்துவது நல்லது. நீங்கள் பைக்கை நிறுத்த வேண்டும் அல்லது பைக்கின் வேகம் மிகக் குறைந்த அளவை அடைந்துவிட்டதாக நீங்கள் உணர்ந்தால் கிளட்சை அழுத்தி சிறிய கியருக்கு மாற்ற வேண்டும். இதைச் செய்யாவிட்டால், பைக் நின்றுவிடும்.

விளம்பரம்

0406

நீங்கள் சாதாரண வேகத்தில் பைக்கை ஓட்டும் போது, பைக்கிற்கு பிரேக் தேவை என்று நீங்கள் உணர்ந்தால், பிரேக்கை அழுத்தினால் போதும். அதற்கு கிளட்ச் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

விளம்பரம்

0506

நீங்கள் குறைந்த வேகத்தில் பயணித்து பிரேக் போட வேண்டும் என்றால் முதலில் கிளட்சை அழுத்தி பின் பிரேக்கை அழுத்தவும். ஏனென்றால் முதலில் பிரேக்கை அழுத்தினால் பைக் நிற்கலாம். முதல் அல்லது இரண்டாவது கியரில் சவாரி செய்யும் போது இதைச் செய்யலாம்.

விளம்பரம்

0606

அதிக வேகத்தில் செல்லும்போது, உடனே பைக்கை நிறுத்த விரும்பினால் முதலில் பிரேக் போட வேண்டும். ஏனெனில் முதலில் கிளட்சை அழுத்தி, பின்னர் பிரேக்கை அழுத்தினால், பைக் நழுவி விழும் அபாயம் உள்ளது.

விளம்பரம்
  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *