Sports

'பும்ரா போன்ற தரமான பவுலர்கள் உருவாக விராட் கோலிதான் காரணம்' – தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் பாராட்டு

'பும்ரா போன்ற தரமான பவுலர்கள் உருவாக விராட் கோலிதான் காரணம்' – தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் பாராட்டு


பும்ரா போன்ற தரமான பவுலர்கள் உருவாக விராட் கோலிதான் முக்கிய காரணம் என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் வெர்னோன் பிலாண்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக மாறியிருப்பவர் பும்ரா. 30 வயதாகும் பும்ரா, டெஸ்ட் போட்டிகளில் 155 விக்கெட்டுகளும், ஒரு நாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 74 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 120 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பும்ரா 145 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அணியில் இவர் இல்லாவிட்டால் அணிக்கு பின்னடைவு என்று கூறும் அளவுக்கு பும்ராவின் பங்களிப்பு இந்திய அணியில் அவசியமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தற்போது ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் பும்ரா போன்ற தரமான பவுலர்கள் உருவாக விராட் கோலிதான் காரணம் என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் வெர்னோன் பிலாண்டர் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி ஒவ்வொரு முறையும் சுற்று பயணம் மேற்கொள்ளும்போது, ​​முந்தைய பயணத்தை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அணிக்கு வெற்றியைத் தேடித் தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

விளம்பரம்

இந்திய அணியில் பும்ரா போன்ற தரமான பவுலர்கள் உருவாக விராட் கோலிதான் காரணம் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் அவர் கேப்டனாக இருந்தபோது, ​​பல்வேறு பவுலர்களை பயன்படுத்தி அவர்கள் பல்வேறு நாடுகளில் நல்ல அனுபவத்தைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தார். என்று கூறியுள்ளார்.

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம். .

  • முதலில் வெளியிடப்பட்டது:



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *