Health

புதிதாக பரவி வரும் 100 நாள் இருமல்… எப்படி பரவுகிறது..? தடுப்பதற்கான வழிகள் என்ன..?

புதிதாக பரவி வரும் 100 நாள் இருமல்… எப்படி பரவுகிறது..? தடுப்பதற்கான வழிகள் என்ன..?


2024 ஆம் ஆண்டில் மட்டுமே இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் போன்ற பகுதிகளில் இதுவரை 600 நபர்கள் இந்த கக்குவான் இருமல் காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

  • 1-MIN READ
    | News18 Tamil
    Tamil Nadu
    Last Updated :

0107

புதிதாக பரவி வரும் 100 நாள் இருமல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

விளம்பரம்

0207

ஒரு நபர் மூச்சு விடும் பொழுது மிகவும் வித்தியாசமான ஒரு சத்தம் இந்த இருமலின் போது ஏற்படுகிறது. இந்த நோய் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. தடுப்பூசி என்பது இந்த இருமல் ஏற்படுவதை தவிர்க்க கூடிய மிகவும் முக்கியமான ஒரு விஷயம். மேலும் இதற்கான சிகிச்சை ஆன்டிபயாட்டிக் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.

விளம்பரம்

0307

2024 ஆம் ஆண்டில் மட்டுமே இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் போன்ற பகுதிகளில் இதுவரை 600 நபர்கள் இந்த கக்குவான் இருமல் காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மூக்கு ஒழுகுதல் மற்றும் தொண்டை கரகரப்பு ஆகியவை இந்த தொற்றுக்கான ஆரம்ப கால அறிகுறிகள். குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் இந்த தொற்று உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தலாம்.

விளம்பரம்

0407

கக்குவான் இருமலால் பாதிக்கப்பட்டுள்ள புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் ஆறு மாதத்திற்கு உள்ளாக இருக்கக்கூடிய குழந்தைகளில் நீர்ச்சத்து இழப்பு, மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நிமோனியா போன்ற சிக்கல்கள் ஏற்படுகிறது.

விளம்பரம்

0507

கக்குவான் இருமலை எப்படி அடையாளம் காண்பது? கக்குவான் இருமல் பல்வேறு நிலைகளில் முன்னேறுகிறது. ஆரம்பகட்டத்தில் இது சாதாரண சளியை போல மூக்கு ஒழுகுதல், தும்மல் மற்றும் லேசான இருமல் போன்ற அறிகுறிகளை கொண்டிருக்கலாம். தொற்று மோசமாக மோசமாக மூச்சு விடும் பொழுது ஒருவித சத்தம் உண்டாகிறது. வாந்தி மற்றும் சோர்வு போன்றவை மோசமான இருமல் காரணமாக ஏற்படுகிறது. இந்த இருமல் பல வாரங்களுக்கு நீடிக்கலாம்.

விளம்பரம்

0607

கக்குவான் இருமலை தவிர்ப்பது எப்படி? கக்குவான் இருமல் பெரிதும் பரவக்கூடிய ஒரு தொற்று. இதற்கு முக்கியமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு டிப்தீரியா டெட்டானஸ் மற்றும் பெர்டூசஸ் போன்ற தடுப்பூசிகளை பயன்படுத்த வேண்டும். பெரியவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பதற்கு பூஸ்டர்கள் பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் மறக்காமல் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வது குழந்தைகளுக்கு ஆன்டிபாடிகள் மாற்றப்படுவதை உறுதி செய்கிறது .மேலும் நல்ல சுவாச சுகாதாரம் பின்பற்றுவதும் அவசியம். தும்மல் அல்லது இருமல் போன்றவை ஏற்படும்பொழுது மூக்கு மற்றும் வாயை மூடி கொள்வது பாக்டீரியா பரவுவதை தடுக்கும்.

விளம்பரம்

0707

இந்தியாவில் கக்குவான் இருமலுக்கான தடுப்பூசிகள் : இந்தியாவில் கக்குவான் இருமலுக்கு DTP தடுப்பூசி போடப்படுகிறது. ஏழு வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு DTP தடுப்பூசி வழங்கப்படாது. எனினும் 7 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு டெட்டானஸ் மற்றும் டிப்தீரியா போன்ற பூஸ்டர் டோஸ்கள் 11 முதல் 12 வயது வரையிலும் மற்றும் ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறையும் வழங்கப்படுகிறது.

விளம்பரம்
  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *