Health

பிறந்த குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெயின் நன்மைகள்! | benefits of coconut oil for babies

பிறந்த குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெயின் நன்மைகள்! | benefits of coconut oil for babies


பிறக்கும் குழந்தைகள் மிகவும் மென்மையான மற்றும் உணர்திறன் கொண்டவையாக இருக்கும். தேங்காய் எண்ணெய் மூலம் பிறந்த குழந்தைக்கு பல நன்மைகளை நாம் தரலாம். பிறந்த குழந்தைகளுக்கு உடலில் மசாஜ் செய்வது ஆரம்ப காலங்களில் பெரிதும் பயனடையும் வகையில் எண்ணெய் மசாஜ் உதவுகிறது. ஏனெனில் இது குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் வரவும், சீரான ரத்த ஓட்டத்தை உருவாக்கவும் உதவுகிறது. பொதுவாகவே குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதை நாம் வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

உங்கள் குழந்தையின் மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தில் முற்றிலும் இயற்கையாகவும், சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதால் தேங்காய் எண்ணெய் உங்கள் குழந்தைகளுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது குழந்தைகளின் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும். குழந்தைகளின் சருமம் லேசாக இருப்பதால் தேங்காய் எண்ணெய் கோடையில் சருமத்தை குளிர்விக்கவும், குளிர்காலத்தில் சருமத்தை சூடேற்றவும் பயன்படுகிறது.

தொட்டில் தொப்பி சிகிச்சை

தொட்டில் தொப்பி எனும் நோய் குழந்தைகளுக்கு வரும் ஒரு வகை தோல் அழற்சி நோயாகும். இது புதிதாக பிறந்த குழந்தையின் ஆரம்ப வாரங்களில் தலையில் வரும் நோயாகும். குழந்தையின் தலையின் மேல்புறத்தில் தோல் சிதைவு, முடி உதிர்தல், பொடுகு வருதல் போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தும். தேங்காய் எண்ணெயை குழந்தையின் தலையில் லேசாக மசாஜ் செய்வதன் மூலம் இந்த நோயை சமாளிக்க முடியும். எண்ணெயை 20 நிமிடங்கள் தலையில் மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

நீளமான மற்றும் மிருதுவான முடியை பெறுங்கள்

தொலைக்காட்சி சந்தைகளில் வரும் விளம்பரங்களை உங்களால் நம்ப முடியவில்லை என்றால், பாரம்பரியமாக நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை குழந்தைக்கு தரவும். ஒவ்வொரு இரவும் குழந்தையின் தலைமுடியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவினால் குழந்தையின் உடல் அமைப்பு சிறப்பாக இருக்கும்.

தோல் அழற்சி

குழந்தையின் தோள் மிகவும் வறண்டு அரிக்கும் போது எக்ஸிமா என்னும் தோல் அலர்ஜி வரும். தேங்காய் எண்ணெயுடன் குழந்தைக்கு மசாஜ் செய்வது அரிக்கும் தோல் அழற்சிக்கு மிகவும் உதவுகிறது. மேலும் குழந்தையின் உடலில் எக்ஸிமா நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேங்காய் எண்ணெய் மேம்படுத்துகிறது. ஈரப்பதம் மற்றும் சருமத்தை மென்மையாகவும் நீரேற்றமாகவும் மாற்ற உதவுகிறது.

டயப்பர் சொறி சிகிச்சை

குழந்தைகளுக்கு டயப்பர் அனுவிப்பது தற்போதைய பெற்றோர்களின் முறையாக உள்ளது. குழந்தைகள் தற்போது ஆரம்ப கால வாழ்க்கையில் டயப்பர் தோல் அழற்சிகளால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய நேரத்தில் தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில், இது உடல் சிவத்தல், வலி மற்றும் வெடிப்புகளின் தீவிரத்தை குறைக்கும்.

உதடு வெடிப்புக்கு நிவாரணம்

உங்கள் குழந்தையின் உதடுகளில் தேங்காய் எண்ணெய் சிறிது தடவுவது குறிப்பாக குளிர்காலத்தில் வெடிப்பு மற்றும் உலர்ந்த உதடுகளுக்கு உதவும்.

பூச்சிக்கடி

குழந்தைகளின் பின்புறத்தில் பூச்சிக்கடி பிரச்சனை அடிக்கடி வரும். குழந்தைகளுக்கு பூச்சி கடித்தால் தோல் சிவந்து எரிச்சல் வரும். அப்போது தேங்காய் எண்ணெயை தடவினால் உடனடி நிவாரணம் பெறலாம். மேலும் தேங்காய் எண்ணெய் கொசுக்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது. புதிதாக பிறந்த குழந்தை அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி பண்புகளால் பயனடைகிறது.

தலையில் பேன் சிகிச்சை

வீட்டில் உள்ள வேறு நபர்களுக்கு அல்லது குழந்தையின் தாய்க்கு தலையில் பேன் வந்தால் குழந்தைக்கு பேன் வரும் அபாயம் உள்ளது. அப்போது தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவும் போது பேன் பரவுவதையும் புதிய நோயையும் தடுக்கும்.

உடலில் மசாஜ்

தேங்காய் எண்ணெய் இலகுவானது மற்றும் உடலில் எளிதில் உறிஞ்சக் கூடியது. எனவே இதை பாடி லோசன் போல குழந்தைக்கு பயன்படுத்தலாம். உங்கள் கைகளில் சிறிது எண்ணெயை தடவி குழந்தையின் உடலை நன்றாக மசாஜ் செய்யவும்.

சளி பிரச்சனைக்கு

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது குறிப்பாக வெப்ப நிலை மாற்றங்கள் வெளிப்படுத்தினால் அடிக்கடி சளி பிடிக்கும். அப்போது தேங்காய் எண்ணெய், புதினா அல்லது யூகலிப்ட்ஸ் எண்ணெய், ஆகியவற்றை சேர்த்து கலந்து சூடுபடுத்தி குழந்தையின் மார்பில் தடவினால் சளி நீங்கும்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *