Business

பிரபல காம்பாக்ட் எஸ்யூவி மாடலுக்கு ரூ.55,000 வரை ஆஃபர்… Hyundai நிறுவனம் அறிவிப்பு!

பிரபல காம்பாக்ட் எஸ்யூவி மாடலுக்கு ரூ.55,000 வரை ஆஃபர்… Hyundai நிறுவனம் அறிவிப்பு!


மஹிந்திரா நிறுவனத்தின் XUV 3XO,மாருதி சுசுகி நிறுவனத்தின் Brezza, டாடா நிறுவனத்தின் Nexon மற்றும் கியா நிறுவனத்தின் Sonet போன்ற மாடல்களுடன் இந்தியாவில் காம்பாக்ட் எஸ்யூவி செக்மென்ட் மிகவும் போட்டி நிறைந்ததாக காணப்படுகிறது.

மேற்கண்ட மாடல்களுடன் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் Venue காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் போட்டியிடுகிறது. பிற நிறுவன கார்களை விட Venue-வின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த ஜூலை 2024-ல் ரூ.55,000 வரை தள்ளுபடியை இந்த மாடலுக்கு நிறுவனம் வழங்குகிறது.

நடப்பு மாதத்தில் (ஜூலை 2024) ஹூண்டாய் நிறுவனம் வென்யூவிற்கு வழங்கும் ரூ.55,000 தள்ளுபடியில் கஸ்டமர் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் உள்ளிட்டவை அடங்கும். இந்த தள்ளுபடிகள் டர்போ பெட்ரோல்-மேனுவல் பவர்டிரெயினுக்கு பொருந்தும். ஹூண்டாய் வென்யூவின் எக்ஸ்ஷோரூம் விலையானது ரூ.7.94 லட்சத்தில் தொடங்கி ரூ.13.44 லட்சம் வரை செல்கிறது. அதே போல இந்தியாவில் 1,24,307 யூனிட்ஸ்கள் விற்பனயுடன் FY24-ல் அதிகம் விற்பனையான SUV-க்களில் ஒன்றாக இருக்கிறது. FY25-ன் முதல் காலாண்டில் (Q1) வென்யூ மாடலின் 28,337 யூனிட்ஸ்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

83PS பவர் மற்றும் 114Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் கப்பா MPi நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 120PS பவர் மற்றும் 172Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் கப்பா டர்போ GDi பெட்ரோல் & 116PS பவர் மற்றும் 250Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் U2 CRDi VGT டீசல் என மொத்தம் மூன்று எஞ்சின் ஆப்ஷன்களுடன் ஹூண்டாய் வென்யூ விற்கப்பட்டு வருகிறது. இதில் 1.2-லிட்டர் எஞ்சின் யூனிட் 5-ஸ்பீட் MT உடன் இணைக்கப்பட்டுள்ளது, அதே நேரம் 1.0-லிட்டர் எஞ்சின் யூனிட்டானது 6-ஸ்பீட் MT மற்றும் 7-ஸ்பீட் DCT ஆப்ஷன்களை கொண்டுள்ளது. 1.5-லிட்டர் எஞ்சின் யூனிட் 6-ஸ்பீட் MT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Also Read | 
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

சிறந்த வீடியோக்கள்

ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ மாடலில் பவர்ட் டிரைவர் சீட், 6 ஏர்பேக்ஸ், எலக்ட்ரிக் சன்ரூஃப், டூயல் கேமரா கொண்ட டேஷ்கேம் மற்றும் லெவல் 1 ஏடிஏஎஸ் போன்ற சில சிறந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது தயாரிப்புகளான Exter, Venue, Creta, Alcazar மற்றும் Tucson போன்ற மாடல்களுடன் வலுவான SUV லைன்அப்-ஐ கொண்டிருக்கிறது. இதனிடையே இந்த ஜூலை மாதத்தில் வென்யூ-வை தவிர நிறுவனம் தனது எக்ஸ்டர் மாடலுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
  • முதலில் வெளியிடப்பட்டது:



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *