National

பிரதமர் மோடி அமைச்சரவையில் 5 சிறுபான்மையினர்: முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை | 5 minorities in PM Modi cabinet

பிரதமர் மோடி அமைச்சரவையில் 5 சிறுபான்மையினர்: முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை | 5 minorities in PM Modi cabinet


புதுடெல்லி: பிரதமராக தொடர்ந்து மூன்றா வது முறையாக நரேந்திர மோடி நேற்று முன்தினம் பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் உள்ள71 உறுப்பினர்களில் 5 பேர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் சீக்கியர்கள், இருவர் பவுத்தர்கள், ஒருவர் கிறிஸ்தவர்.

சீக்கியர்களில், பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த ஹர்தீப்சிங் புரிக்கு (72) மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபை சேர்ந்த ஹர்தீப் சிங் புரி, 1974-ல்ஐஎப்எஸ் பெற்ற முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி. 2014-ல் பாஜகவில் இணைந்த இவர், 2018-ல் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகி கேபினட்டிலும் சேர்க்கப்பட்டார். 2019 மக்களவைத் தேர்தல் அமிர்தசரஸில் காங்கிரஸ்வேட்பாளரிடம் தோல்வி அடைந் தார். எனினும் மீண்டும் இவருக்கு மத்திய அமை ச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. பிறகு உ.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யான ஹர்தீப் சிங், மூன்றாவது முறையாக அமைச்சராகி விட்டார்.

பஞ்சாபின் மற்றொரு சீக்கிய ரான ரவ்னீத் சிங்(48) பிட்டுவும் மத்திய இணை அமைச்சராகி உள்ளார். இவர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்தர் சிங்கின் பேரன் ஆவார்.ரவ்னீத் பஞ்சாபில் தொடர்ந்து 15 வருடம் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தார். இந்த தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்து, லூதியாணாவில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். இருப்பினும் மத்திய அமைச்சரான இவர் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

புத்த மதத்தினர் இருவரில் மத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜுவும் (54) உள்ளார். 3 முறை எம்.பி.யான இவர், அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியில் 4-வது முறையாக வெற்றி பெற்றவர்.பிரதமர் மோடியின் முதல் 2 அமைச்சரவையிலும் இடம்பெற்றவர்

மற்றொரு புத்த மதத்தவரான அதவாலே ராம்தாஸ் பந்துவும் (64) பிரதமர் மோடியின் இரண்டு ஆட்சிகளில் இணை அமைச்சராக இருந்தவர். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், இந்தியக் குடியரசுகட்சி ஏ-பிரிவின் தலைவர். கடந்த 2014 முதல் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இவருக்கு மீண்டும் இணை அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சிறுபான்மையினரில் ஐந்தாவது அமைச்சர் கேரளாவின் ஜார்ஜ்குரியன் (63). 1980-ல் கட்சியில்இணைந்தது முதல் பாஜகவின் கேரள முகங்களில் முக்கியமானவராக கருதப்படுபவர். தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ள குரியன் தற்போது இணை அமைச்சராகி உள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர் அல்லாத இவர், இனி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்.

இந்தமுறை தேர்தலில் மொத்தம்24 முஸ்லிம்கள் எம்.பி.க்களாக தேர்வாகினர். எனினும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிலும் முஸ்லிம் எம்.பி.க்கள்இல்லை. என்றாலும் பாஜகவின்முஸ்லிம் தலைவர்களில் ஒருவர் கூட இந்தமுறை அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *