Sports

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள் அறிமுகம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள் அறிமுகம்


பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டிக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டியினர் முழுவீச்சில் வருகிறார்கள்.

இந்த நிலையில் ஒலிம்பிக்கில் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பதக்கங்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. பாரீசில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பதக்கத்தில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்களை ஒலிம்பிக் கமிட்டியினர் விளக்கினர்.

பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிக்காக மொத்தம் 5,084 பதக்கங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் 2,600 பதக்கங்கள் ஒலிம்பிக்கில், மற்ற பதக்கங்கள் பாரா ஒலிம்பிக்கில் வழங்கப்பட உள்ளன.

பதக்கத்தின் முன்பக்கத்தில் கிரேக்கத்தின் வெற்றி கடவுளான நாய்க்கி ஏதென்ஸ் ஸ்டேடியத்தின் முன் நிற்பது போன்றது, ஒலிம்பிக் வளையம் மற்றும் நடப்பு ஒலிம்பிக்கின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் பிரான்சின் தனி அடையாளமான உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுர சின்னமும் ஒரு ஓரத்தில் இடம் பெற்றுள்ளது.

பதக்கத்தின் பின்பக்கத்தில் ஈபிள் கோபுரத்தின் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஈபிள் கோபுரத்தை புதுப்பித்த போது அதில் இருந்து அகற்றப்பட்ட இரும்பு உலோகங்கள் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை செதுக்கி, பாலிஸ் செய்து சிறிய துண்டுகளாக அறுங்கோண வடிவில் பதக்கத்தின் பின்பகுதியில் பதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதக்கத்திலும் ஈபிள் கோபுரத்தின் 18 கிராம் இரும்பு அடங்கியிருக்கும். இவற்றை பிரான்சின் பிரபல ஆபரண நிறுவனமான சாமெட் வடிவமைத்துள்ளது.

''1889-ம் ஆண்டு உருவான ஈபிள் கோபுரத்தில் இருந்து ஒரு பகுதியை ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று விரும்பினோம். அதை நிறைவேற்றி உள்ளோம்' என்று போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் டோனி எஸ்டன்கட் குறிப்பிட்டார்.

பதக்கம் 85 மில்லிமீட்டர் சுற்றளவும், 9.2 மில்லிமீட்டர் அடர்த்தியும் கொண்டது. தங்கப்பதக்கம் 529 கிராம் எடை கொண்டது. இது முற்றிலும் தங்கத்தால் செய்யப்பட்டது அல்ல. வெள்ளியால் உருவாக்கப்பட்ட இந்த பதக்கத்தில் 6 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். வெள்ளிப்பதக்கம் 525 கிராமம், வெண்கலம் 455 கிராமம் எடை கொண்டது.

பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒரு பக்கத்தில் ஈபிள் கோபுரத்தின் தோற்றம் பொறிக்கப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக் போட்டி அங்கேயே ஆகஸ்டு 28-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *