Sports

தோனியை விட எங்களோட அந்த இங்கிலாந்து வீரர் தான் பெஸ்ட்.. அலெக் ஸ்டீவர்ட் அதிரடியான பேட்டி

தோனியை விட எங்களோட அந்த இங்கிலாந்து வீரர் தான் பெஸ்ட்.. அலெக் ஸ்டீவர்ட் அதிரடியான பேட்டி


இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்த இந்தியா தொடரை சமன் செய்தது.

இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் இங்கிலாந்தின் விக்கெட் கீப்பராக பென் ஃபோக்ஸ் விளையாடி வருகின்றனர். அதில் கேஎஸ் பரத் கீப்பராக ஓரளவு நன்றாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் இந்த 2 வேலைகளிலுமே நன்றாக செயல்பட்டு வருகிறார்.

தோனியை விட பெஸ்ட்:
இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ் தோனி விக்கெட் கீப்பிங் செய்வதில் வேகமாக செயல்படக்கூடியவர் என்று பென் ஃபோக்ஸ் அவரை விட வேகமாக செயல்பட்ட வீரர்களை எடுக்க கூடியவர் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் அலெக் ஸ்டீவர்ட் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“அவர் யாராலும் செய்ய முடியாத விஷயங்களை செய்து வருகிறார். அவருடைய வேகம் வேறு யாருக்கும் கிடையாது. எம்எஸ் தோனி வேகமான கைகளை கொண்டவர். ஆனால் ஃபோக்ஸ் இந்த விளையாட்டில் அதிவேகமான கைகளைக் கொண்டுள்ளார். குறிப்பாக இந்திய மைதானங்கள் சுழலுக்கு ஆதரவாக இருப்பதால் வலைப்பயிற்சியில் அவர் 80 – 20 என்ற சதவீதத்தில் தான் தமக்கு சாதகமாக பயிற்சிகளை மேற்கொள்வார்”

“அங்கே பந்து சுழலும், பவுன்சாகி கீழே வரும் என்பதை தெரிந்து அவர் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் மணிக்கணக்கில் பயிற்சி செய்யும் காரணத்தால் தான் அவரைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்தத் தொடரில் அவர் எடுத்த சில கேட்ச்கள் அந்த உழைப்புக்கு வெகுமதியாக அமைந்தது. அவரை உலகின் சிறந்த வீரர் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன்”

இதையும் படிங்க: 3 ஆவது டெஸ்ட் போட்டியிலும் சர்பராஸ் கான் இடம்பிடிக்க வாய்ப்பேயில்லை – ஏன் தெரியுமா? (விவரம் இதோ)

“அணியின் சமநிலைக்காக அவர் தொடர்ச்சியாக விளையாடுவதில்லை. எனினும் அவர் 50 அல்லது 60 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவார் என்று உண்மையில்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் மீண்டும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *