National

துபாயில் 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோயில்… சிறப்பு அம்சங்கள் என்ன?

துபாயில் 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோயில்… சிறப்பு அம்சங்கள் என்ன?


துபாயில் 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்து கோயில் குறித்த விபரங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. கோயில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி கோயில் திறப்பு விழா நடைபெறும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த கோயிலை BAPS இந்து கோயில் என்று பரவலாக அழைக்கின்றனர். இங்கு BAPS என்பதற்கு போச்சசன்வாசி அக்சர் புருஷோத்தம் சுவானி நாராயண சாஸ்தா என்பது பொருள். இந்த கோயிலை கட்டுவது குறித்த அறிவிப்பை துபாய் அரசு கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இதையொட்டி 27 ஏக்கர் பரப்பளவு நிலத்தை துபாய் அரசு வழங்கியது.

மனிதநேயத்தையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் கோயிலாக இது அமையும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான கட்டுமான பணிகள் 2018 பிப்ரவரி 11 ஆம் தேதி தொடங்கியது. அபுதாபியின் அல் ரபா என்ற இடத்தில் இருக்கும் அபு முரேகா என்ற பகுதியில்தான் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயில் கட்டுவதற்கான இளஞ்சிவப்பு வண்ண கற்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த கற்கள் 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கும் தன்மை கொண்டது. 108 அடி உயரமும், 262 அடி நீளமும், 180 அடி அகலமும் கொண்டதாக கோயில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ. 904 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் அபுதாபி – குவெய்பாத் ஹைவேயில் (E11) இருந்து அல் தாஃப் சாலை (E 16) வழியே செல்ல வேண்டும். துபாய்க்கும் – அபுதாபிக்கும் இடையே இந்த கோயில் அமைந்துள்ளது.

துபாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இந்து சமூக மக்கள் கணிசமாக இருக்கும் நிலையில் இந்த கோயில் மத நல்லிணக்கத்தை பேணும் இடமாக அமையும் என்று ஆன்மிக தலைவர்கள் கூறியுள்ளனர்.

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *