National

சைதை துரைசாமி மகன் எங்கே? டிஎன்ஏ சோதனையை தீவிரப்படுத்தும் போலீஸ்.. சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள்!

சைதை துரைசாமி மகன் எங்கே? டிஎன்ஏ சோதனையை தீவிரப்படுத்தும் போலீஸ்.. சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள்!


சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி அமைப்பை நடத்தி வருபவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. திரைப்பட இயக்குநரான வெற்றி துரைசாமி தனது அடுத்த அடுத்த படத்தின், படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு கடந்த பிப். 4ஆம் தேதியன்று இவர்கள் சென்ற கார் கஷாங் நுல்லா மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சட்லெஜ் ஆற்றில் விழுந்தது. விபத்து குறித்து தகவலறிந்த சென்ற மீட்புப் படையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத்தை மீட்டனர். வெற்றி துரைசாமியும், உள்ளூரை சேர்ந்த கார் ஓட்டுநர் தன்ஜினும் காணாமல் போயினர். பின்னர் தன்ஜினின் சடலம் மீட்கப்பட்டது.

தேசிய மீட்பு படையினரும் தேடுதல் பணியின் போது ஆற்றில் கவிழ்ந்த காரில் வெற்றியின் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, ஆற்றங்கரையோரம் உள்ள பாறையில் மனித மூளையின் திசுக்கள் கண்டெடுக்கப்பட்டு அம்மாநில தடயவியல் மையத்தில் டிஎன்ஏ ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் பணி ஒரு வாரம் நீண்ட நிலையில், விபத்து நடந்தபோது வெற்றி துரைசாமி ஆற்றில் விழுந்ததைப் போல, ஒரு பொம்மையை மாதிரியாக வைத்து அதன் போக்கை காவல்துறையினர் கண்காணித்தனர்.

இதனிடையே, வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பாக இமாச்சல் காவல்துறை சார்பில் தமிழ்நாடு காவல்துறை கடிதம் எழுதப்பட்டது. அதில், காணாமல் போன வெற்றியின் டிஎன்ஏ-வை உறுதிப்படுத்த அவரது தந்தை சைதை துரைசாமியின் டிஎன்ஏ மாதிரியை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து சைதை துரைசாமி மற்றும் அவரது மனைவியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இமாச்சல் தடயவியல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இதையும் படிக்க : கிளாம்பாக்கத்தில் போதிய அரசு பேருந்து இல்லை என்பது வதந்தி.. அமைச்சர் சிவசங்கர் தகவல்!

இருவரின் ரத்த மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளை வைத்து வெற்றியின் நிலை தெரியவரும். டிஎன்ஏ பரிசோதனை முடிவு நாளை வெளியாகும் என கருதப்படுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *