Health

சுகர்.. கொலஸ்ட்ரால் கண்ட்ரோல் செய்யும் கருப்பு கொண்டை கடலை.. எப்போது.. எப்படி சாப்பிடணும் தெரியுமா?

சுகர்.. கொலஸ்ட்ரால் கண்ட்ரோல் செய்யும் கருப்பு கொண்டை கடலை.. எப்போது.. எப்படி சாப்பிடணும் தெரியுமா?


நீரிழிவு நோய் பாதிப்பு
கட்டுக்கடங்காமல் அதிகரித்துவரும் வாழ்நாள் நோயில் இதுவும் ஒன்றாகிவிட்டது. இதனால் சாதாரண வாழ்க்கை முறையை தொடர்வதில் அதிக சிரமத்தை எதிர்கொள்கின்றனர். உணவில் எதை எடுக்க வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பதிலும் கூட பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். சில உணவுகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். அதை தினசரியாகவோ அல்லது அடிக்கடி சேர்ப்பதோ நன்மை அளிக்கும். அப்படியான உணவில் ஒன்று கருப்பு மூக்கடலை. புரதம் நிறைந்த இது சர்க்கரை நோயாளிகளுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

கருப்பு கொண்டைக்கடலை
கருப்பு கொண்டைக்கடலை அதிக புரதச்சத்து மற்றும் அதிக ஊட்டச்சத்துக்காக சொல்லப்படும் ஒன்று. பெரிய வெள்ளை கொண்டைக்கடலை மற்றும் கருப்பு கொண்டை கடலை இரண்டுமே ஃபேபேசி குடும்பத்தை சார்ந்தவை. சைவ உணவு உண்பவர்களுக்கு ஆரோக்கியமான உணவாக இது உள்ளது. அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உள்ளது. நீரிழிவு நோய்க்கு ஏற்ற உணவுகளில் இதுவும் ஒன்று.

கருப்பு கொண்டை கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதா?

கருப்பு கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது

இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது. கருப்பு கொண்டை கடலை கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டையும் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, ஒரு கப் கொண்டை கடலை உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த போதுமானதாக இருக்கும். நீரிழிவு போன்று கொழுப்பு அளவையும் இது கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் உடல் எடை கட்டுக்குள் வைக்கவும் இந்த கருப்பு கொண்டை கடலை உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து எடை இழப்பை ஊக்குவிக்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தேவைகளை அதிகரிக்கவும் செய்யும்.
சர்க்கரை நோயாளிகள் கருப்பு கொண்டை கடலையை எப்படி சாப்பிடுவது?

  • கருப்பு கொண்டை கடலையை பல்வேறு வழிகளில் தயாரிக்கலாம். விரும்பும் முறையில் இதை தயாரிக்கலாம்.
  • 8 மணி நேரம் கருப்பு கொண்டை கடலையை ஊறவைத்து குக்கரில் போதுமான நீர் விட்டு உப்பு சேர்த்து .. 5 விசில் விடவும். பிறகு சுண்டலில் நீர் வடிகட்டி அப்படியே சாப்பிடலாம்.
  • வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் நறுக்கி சேர்க்கவும். காரத்துக்கு பச்சை மிளகாய் சேர்க்கவும். பிறகு சுண்டல் சேர்த்து நன்றாக கலந்து கொத்துமல்லி தழை தூவி சாப்பிடலாம். தேவைக்கு எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துகொள்ளலாம். முளைக்கட்டி சேர்க்கலாம்.
  • க்ரேவியாக்கி உணவில் சேர்க்கலாம். ஆனால் எண்ணெயில் பொரித்து சாப்பிடகூடாது.

கருப்பு கொண்டை கடலையை எப்படி எடுப்பது?
காலை உணவு எப்போதுமே நாளின் மிக முக்கிய உணவு. நாள் முழுவதும் நிலையான ஆற்றலை உறுதிப்படுத்த ஆரோக்கியமான மற்றும் கனமான காலை உணவு அவசியம் அதிலும் நீரிழிவு நோயாளியாக இருந்தால் காலை உணவை தவறவிடக்கூடாது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். கருப்பு கொண்டை கடலையை காலை நேரத்தில் சாப்பிடுவது சிறந்த உணவு நேரமாக இருக்கும். மேலும் நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் பராமரிக்கவும் உதவும். இதனோடு மேற்கொண்டு பல புதிய காய்கறிகளை சேர்ப்பது நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்கவும் உதவும்.

கருப்பு கொண்டை கடலை இதர நன்மைகள்

  • ஆக்ஸிஜனேற்றத்தின் மூலம் என்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும். இதய நோய் அபாயம் , கொழுப்பு அளவு கட்டுக்குள் இருக்கும்.
  • இரும்புச்சத்து நிறைந்தவை என்பதால் கூந்தல் ஆரோக்கியம் மேம்படுத்தும்.
  • உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதால் ரத்த சோகையை தடுக்கும்.
  • சைவ உணவு உண்பவர்களுக்கு இது புரதம் நிறைந்த ஒன்றாக இருக்கும்.
  • நார்ச்சத்து கொண்டவை என்பதால் இது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்யும்.
  • எடை இழப்பை உறுதி செய்யும்.

தனலட்சுமி கட்டுரையாளரை பற்றி

தனலட்சுமி

நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.… Read More



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *