Health

சுகர் கன்ட்ரோல் செய்ய பூண்டு உதவுமா? – News18 தமிழ்

சுகர் கன்ட்ரோல் செய்ய பூண்டு உதவுமா? – News18 தமிழ்


Diabetes prevention : சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அந்த வகையில் தொடர்ந்து பூண்டு சாப்பிடுவது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் என்று கூறுகிறார்கள்.

  • 2-MIN READ
    | News18 Tamil
    Tamil Nadu
    Last Updated :

019

உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றங்களே சர்க்கரை நோய் அதிகரிப்பதற்குக் காரணம் என்று சொல்லலாம். ஆனால் முன்னெச்சரிக்கைகள் மற்றும் முறையான உணவு முறைகளை பின்பற்றினால் இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

விளம்பரம்

029

நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பூண்டை எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்பது முக்கியம். அந்த தகவல் இதோ. சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாத நாள்பட்டநோய். இந்த நோயை குணப்படுத்த இன்னும் மருந்து இல்லை. ஆனால் மாத்திரைகள், சில ஆயுர்வேத மற்றும் வீட்டு வைத்தியம் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

விளம்பரம்

039

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அந்த வகையில் தொடர்ந்து பூண்டு சாப்பிடுவது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் என்று கூறுகிறார்கள். அது பற்றிய முழுமையான தகவல்கள் இதோ…

விளம்பரம்

049

இது குறித்து பெங்களூரு மருத்துவமனையின் முன்னாள் பொது மருத்துவர் டாக்டர் பாக்கி சர்மா தகவல் தெரிவித்துள்ளார். சர்க்கரை நோயாளிகள் பூண்டு சாப்பிடுவது பாதுகாப்பானதா? சர்க்கரை நோயாளிகள் பூண்டு எவ்வளவு சாப்பிட வேண்டும்? பூண்டு எவ்வளவு நன்மை பயக்கும்? போன்ற கேள்விகளை அவரிடம் முன் வைத்த போது அளித்த பதில்…

விளம்பரம்

059

பூண்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன : டாக்டர் பாக்கியின் கூற்றுப்படி, பூண்டில் கார்போஹைட்ரேட், கொழுப்புகள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி6, வைட்டமின் பி9, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம் உள்ளன. அதோடு மாங்கனீசு, பாஸ்பரஸ், சத்துக்கள் உள்ளன. பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவையும் இதில் உள்ளன.

விளம்பரம்

069

பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதில் துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் ‘அலிசின்’ என்ற சிறந்த கந்தக கலவை உள்ளது. பூண்டின் காரம் தன்மை கொண்ட சுவை மற்றும் வாசனைக்கு அலிசின்தான் காரணமாகும்.

விளம்பரம்

079

சர்க்கரை நோய்க்கு பூண்டு மருந்து : டாக்டர். சர்மாவின் கூற்றுப்படி, பல ஆய்வுகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமல்லாமல், டைப் 2 நீரிழிவு நோயைத் தடுப்பதிலும் பூண்டு பங்கு வகிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

விளம்பரம்

089

பூண்டில் துத்தநாகம் மற்றும் இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் அவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றன. கார்போஹைட்ரேட் உடனடி வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கார்போஹைட்ரேட்டுகள் நேரடியாக இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்கின்றன மற்றும் பூண்டு சாப்பிடுவது அதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

விளம்பரம்

099

இருப்பினும், ஹோமோசைஸ்டீன் என்ற அமினோ அமிலம் நீரிழிவு நோய்க்கான ஆபத்து காரணியாகும். பூண்டின் நீண்ட கால நுகர்வு உடலில் இந்த கலவையை அதிகரிக்கிறது. எனவே பூண்டை எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அந்த வகையில் ஆய்வுகளின் படி ஒரு நாளைக்கு ஒரு பல் பூண்டு பச்சையாக சாப்பிட்டாலே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்
  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *