State

கார்கில் போர் வெற்றி தினம்: போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ரவி அஞ்சலி | Governor Ravi Mourns at War Memorial

கார்கில் போர் வெற்றி தினம்: போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ரவி அஞ்சலி | Governor Ravi Mourns at War Memorial


சென்னை: கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள போர்நினைவுச் சின்னத்தில் தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார்.

கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர்மலையை ஆக்கிரமித்தது. இதையடுத்து, இந்திய ராணுவம், பாகிஸ்தான்ராணுவத்தை எதிர்த்து போரிட்டது. மேமாதம் தொடங்கிய போர் ஜுலை மாதம் வரை நடைபெற்றது. இப்போரில், இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.ஜூலை 26-ம் தேதி கார்கில் பகுதியில் இந்தியக் கொடியை நிலைநாட்டியது.

இதையடுத்து, ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினமாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது.கார்கில் போரில், இந்தியா வெற்றி பெற்று, இந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இப்போரில் 527 வீரர்கள், தங்களது இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் உள்ள இந்திய ராணுவத்தின் தக்ஷிண பாரத பகுதியின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரண்பிர் சிங் பிரார் மற்றும் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், முப்படைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல்படையின் மூத்த அதிகாரிகள் போர் நினைவிடத்தில் மரியாதைசெலுத்தினர். சென்னையில் உள்ளகார்கில் போர் வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் படைவீரர்களின் குடும்பத்தினரும், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே, பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற கார்கில்வெற்றி தின விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கார்கில் போரில் பங்கேற்ற வீரர்களை கவுரவித்தார்.

முதல்வர் புகழாரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில், ‘கார்கில் போர் வெற்றியின் வெள்ளி விழா நாளில் ஈடு இணையற்ற துணிச்சலுடன் நமது நாட்டைக் காத்தவீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுகிறோம். நமது சுதந்திரத்தைக் காப்பதில் அவர்களின் வீரத்தையும், அர்ப்பணிப்பையும் மறவாதுநினைவுகூர்வோம்’ என கூறியுள்ளார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *