Business

கார்களின் விலையை சர்ரென உயர்த்தும் கியா.. காரணம் இதுதான்!

கார்களின் விலையை சர்ரென உயர்த்தும் கியா.. காரணம் இதுதான்!


SUV கார் பிரிவில் மற்ற பிரபல ஆட்டோமொபைல் நிறுவனங்களான மாருதி சுசூகி, ஹூண்டாய் மற்றும் டாடா கார்களுக்கு கடுமையான போட்டியளித்து வரும் கியா, தங்களுடைய அனைத்து கார்களின் விலைகளையும் 3 சதவிகிதம் அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி 2024-ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கியா நிறுவனத்தின் பிரபல கார்களான செல்டாஸ், சோனெட் மற்றும் கேரன்ஸ் வாகனங்களின் விலை அதிகரிக்க உள்ளது. இந்த விலை அதிகரிப்பால் கியா கார்களின் விற்பனையில் ஏதாவது சரிவு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

உதிரிபாகங்கள் மற்றும் விநியோகப் பிரிவில் உள்ள பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் கார்களின் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என கியா நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வருடத்தில் இப்போதுதான் முதல்முறையாக கியா நிறுவனம் தங்களது கார்களின் விலையை அதிகரித்துள்ளது. எங்களது மதிப்புமிகுந்த வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் ப்ரீமியம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட பொருட்களை கொடுக்கவே நாங்கள் முழுமூச்சாக உழைத்து வருகிறோம். எனினும் தொடர்ந்து உதிரிபாகங்களின் விலை அதிகரித்து வருவதாலும் உற்பத்தி செலவினங்கள் திடீரென அதிகரித்துள்ளதாலும் வேறு வழியின்றி இந்த விலையேற்றத்தை நடைமுறைப்படுத்தி உள்ளோம்.

விளம்பரம்

இந்த விலையேற்றம் எங்களது வாடிக்கையாளர்களை பாதிக்காத வண்ணம் பல செலவினங்களை கியா நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகையால் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு கியா கார்களை வாங்குவதற்கு அதிகம் செலவழிக்க வேண்டுமோ எனப் பயப்படத் தேவையில்லை எனக் கூறுகிறார் கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் தேசிய தலைவர் ஹர்தீப் சிங் ப்ரார்.

தொடர்புடைய செய்திகள்

இதையும் படிங்க: 
முடிவுக்கு வருகிறதா ஒன்ப்ளஸ் டிவி? – திடீரென இணையதளத்திலிருந்த டிவி மாடல்களை அகற்றிய ஒன்பிளஸ்!

இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் முக்கியமான பங்களிப்பாளராக இருக்கும் கியா நிறுவனம், தற்போது வரை தோராயமாக 1.16 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது. இவர்களின் வாகன வரிசையில், 6,13,000 கார்கள் விற்பனையாகி செல்டாஸ் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதற்கடுத்தபடியாக இரண்டாம் இடத்தை சோனெட் பிடித்துள்ளது. இந்தக் கார் 3,95,000 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. அதுமட்டுமின்றி இவற்றோடு சேர்த்து 1,59,000 கேரன்ஸ் கார்களும் விற்பனையாகியுள்ளன.

விளம்பரம்

Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த மாதம் கியா இந்தியா நிறுவனத்தில் உள்ள அனைத்து கார்களும் மொத்தமாக சேர்த்து 20,200 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி இருந்தன. இதில் 9,102 கார்கள் விற்பனையாகி சோனெட் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கடுத்த இடத்தை 6,265 கார்கள் விற்பனையாகி செல்டாஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இவற்றோடு சேர்த்து 4,832 கார்கள் விற்பனையாகி மூன்றாம் இடத்தை கேரன்ஸ் பிடித்துள்ளது.

விளம்பரம்

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • முதலில் வெளியிடப்பட்டது:



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *