Business

கடுமையான வீழ்ச்சியில் தவிக்கும் மெக் டொனால்டு நிறுவனம்!

கடுமையான வீழ்ச்சியில் தவிக்கும் மெக் டொனால்டு நிறுவனம்!


குவைத் (06 பிப்ரவரி 2024): கடுமையான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வரும் மெக் டொனால்டு நிறுவனம், தமது வீழ்ச்சிக்குக் காரணமாக இஸ்ரேலைக் குற்றம் சுமத்தியதோடு, தமது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.

துரித உணவுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்றது McDonald’s நிறுவனம்.

கடந்த அக்டோபர் 2023 இல், காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்த சமயத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கு தாம் இலவசமாக உணவு வழங்குவதாக McDonald’s இன் இஸ்ரேலிய உணவகம் ஒன்று தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையானது.

இதனால் உலகம் முழுவதும் மெக் டொனால்டு நிறுவனத்தின் மீது மக்களின் கண்டனங்கள் குவிந்தன. அத்துடன் #BoycottMcDonalds எனும் ஹாஷ் டேக் மூலம் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்கள் McDonald’s உணவுகளைப் புறக்கணித்தனர். (இந்நேரம்.காம்)

உணவுப் பொருட்களின் விலையை மிகவும் குறைத்தபோதிலும், மக்கள் புறக்கணிப்பைத் தொடர்ந்தனர். இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்திப்பதாக McDonald’s அறிவித்துள்ளது.

McDonald’s நிறுவனத்தின் CEO  ஆன Chris Kempczinski  நேற்று வெளியிட்ட அறிக்கையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்:

“மத்திய கிழக்கு நாடுகள், மலேசியா மற்றும் இந்தோனேஷியா போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் ஒட்டு மொத்தமாக மக்கள் மெக் டொனால்டு உணவகத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளனர். இதனால் McDonald’s நிறுவனம் அதிர்ச்சியூட்டும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.”

“இஸ்ரேலில் உள்ள எங்கள் மெக் டொனால்டு பிரிவு ஒன்று, இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கு இலவசமாக உணவை அளித்த காரணத்திற்காக மக்கள் புறக்கணித்துள்ளனர்.  இதற்காக நான் மன்னிப்புக் கோரி விட்டோம். இருந்த போதிலும், இஸ்ரேல் போரை முழுமையாக நிறுத்திக் கொள்ளும்வரை மக்களின் எழுச்சி முடிவுக்கு வரும் என்று எங்களுக்குத் தோன்றவில்லை!”

இவ்வாறு கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி கூறியுள்ளார்.

மக்களின் #BoycottMcDonalds புறக்கணிப்பைத் தொடர்ந்து, சவூதி அரேபியா, ஓமன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், எகிப்து, பஹ்ரைன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள McDonald’s கடையை நடத்தும் உரிமையாளர்கள் தங்களது வியாபாரத்தில் இருந்து மில்லியன் கணக்கான டாலர்களை நன்கொடையாக காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு  அளிப்போம் என அறிவித்தனர். ஆனாலும், புறக்கணிப்பு தொடர்கிறது.

அமெரிக்காவின் சிகாகோவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் McDonald’s மிகவும் பிரபலமான அமெரிக்க பிராண்டுகளில் ஒன்றாகும். ஆனால், இதன் சங்கிலிப் பிரிவுகள் உலகெங்கிலும் இருந்தாலும் அவற்றின் உரிமையாளர்கள் அந்நாட்டைச் சேர்ந்தவர்களே ஆவர்.

மெக் டொனால்டு போலவே உணவுச் சங்கிலி நிறுவனமான Starbucks (ஸ்டார்பக்ஸ்), மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட வணிக சரிவைப் பற்றி அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

 





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *