Sports

'ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் களம் இறங்குவார்' – ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

'ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் களம் இறங்குவார்' – ரிக்கி பாண்டிங் நம்பிக்கை


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் களம் இறங்குவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே நடந்த பயங்கர கார் விபத்தில், முன்னணி கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். அவருக்கு தலை, முதுகு, கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ரூர்க்கியில் முதற்கட்ட சிகிச்சையும், மும்பையில் கால் மூட்டில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

இதன்பின்னர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரிஷப் பந்த் ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது பூரண குணம் பெற்றுள்ள அவர் கிரிக்கெட் விளையாடுவதற்காக தன்னை தயார்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்கிறார். இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் பங்கேற்பார் என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து ரிஷப் பந்த் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார். அதற்க்கான தகுதி அவருக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். அவரது சமூக வலைதள பதிவுகளை பார்த்தாலே உங்களுக்கு நன்றாக தெரியும். அவர் முழுவதுமாக விளையாடுவதற்கு தயாராகி விட்டார் என்று கருதுகிறேன். இன்னும் சில வாரங்களில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு தயாராகி வருகிறார். ஆனால் அவர் தொடர்ந்து விக்கெட் கீப்பிங்தான் செய்வாரா என்பதை இப்போது சொல்ல முடியாது. என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .

  • முதலில் வெளியிடப்பட்டது:



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *