National

உலக அரங்கில் கால்பதிக்கும் இந்திய பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: பிரதமர் மோடி பாராட்டு | PM Modi Applauds Indian Universities For Global Rankings Success

உலக அரங்கில் கால்பதிக்கும் இந்திய பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: பிரதமர் மோடி பாராட்டு | PM Modi Applauds Indian Universities For Global Rankings Success


புதுடெல்லி: உலக அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களை லண்டனை சேர்ந்த ‘டைம்ஸ் மேல் படிப்பு தரவரிசை நிறுவனம்’ பட்டியலிடுகிறது.

இந்த நிறுவனத்தின் சர்வதேசவிவகாரப் பிரிவு தலைமை அதிகாரி பில் பாட்டி விடுத்துள்ள செய்தியில், “டைம்ஸ் மேல்படிப்பு தரவரிசை பட்டியலில் இடம் பெறும் இந்தியப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நரேந்திர மோடி மேற்கொள்ளும் உலகளாவிய சீர்திருத்தமே காரணம்.

கடந்த 2017-ம் ஆண்டில், டைம்ஸ் மேல்படிப்பு தரவரிசைப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் 42 மட்டுமே இடம் பெற்றன. தற்போது 2025-ம் ஆண்டு தரவரிசை பட்டியலில் இடம் பெற இந்தியாவின் 133 பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்துள்ளன. உலகளவில் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “உலகஅரங்கில் இந்திய பல்கலைக்கழகங்கள் அதிகளவில் கால் பதிப்பதை பார்க்கும்போது பெருமையாக உள்ளது. தரமான கல்வியை அளிப்பதில் எங்களின் உறுதிப்பாடு நல்ல பலனை அளித்துள்ளது.

நமது கல்வி நிறுவனங்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து, அவற்றின் வளர்ச்சிக்கும், புதுமை கண்டுபிடிப்புகளுக்கும் தேவையான வாய்ப்பை வழங்குவோம். இது நமது இளைஞர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *