Business

உலகின் புதிய ஹைபிர்ட் காரை அறிமுகம் செய்த புகாட்டி – News18 தமிழ்

உலகின் புதிய ஹைபிர்ட் காரை அறிமுகம் செய்த புகாட்டி – News18 தமிழ்


உலகின் புகழ்பெற்ற காரான புகாட்டி தற்போது மணிக்கு 445 கி.மீ. பறக்கக் கூடிய புதிய டூர்பில்லியன் வி16 ஹைப்ரிட் பவர்டிரெய்ன் காரை அறிமுகம் செய்துள்ளது. 1,000 HP திறன் கொண்ட இந்த கார் 8.3 லிட்டர் V16 இன்ஜினை கொண்டுள்ளது. அத்துடன் மூன்று மின்சார மோட்டார்கள் கூடுதலாக 800 HP பவரை சேர்ப்பதால், மொத்தம் 1,800 குதிரைத்திறன் கொண்ட காராக மாற்றப்பட்டுள்ளது.

Tourbillon கார் வெறும் இரண்டு வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தையும், ஐந்து வினாடிகளில் 300 கி.மீ. வேகத்தையும் எட்டக்கூடியது. காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 445 கி.மீ. ஆக இருக்கும் நிலையில், இது உலகின் அதிவேக கார்களில் ஒன்றாக மாறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டூர்பில்லியன் கார்கள் வெறும் 250 என்ற எண்ணிக்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.34 கோடி.

இதையும் படிங்க:
”எனக்கு பிடித்த கேப்டன் தோனி, ரோகித், விராட் எல்லாம் இல்லை” – ஜஸ்பிரித் பும்ரா ஓபன் டாக்!

சிறந்த வீடியோக்கள்

1,995 கிலோ எடை கொண்ட இந்த கார், இதற்கு முந்தைய ரகமான சிரோனை விட எடை குறைவானது. இந்த ஹைபிரிட் காரில் உள்ள 25Kwh பேட்டரி முழுமையாக செயல்படும் திறன் கொண்டது. எனவே, இந்த பேட்டரியை 0 – 80% வரை சார்ஜ் செய்ய வெறும் 12 நிமிடங்களே ஆகும். இதன் தனித்தன்மை மற்றும் உயர் செல்திறன் மற்றும் வடிவமைப்பு ஆகியவை உலகில் ஆடம்பர ஹைப்பர் கார்களின் வரிசையில் இதை முதலிடத்தில் நிறுத்தியுள்ளது.

விளம்பரம்
  • முதலில் வெளியிடப்பட்டது:



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *