Cinema

“அழைப்பு வந்தது… ஒரு மதத்தை போற்றும் கட்சியுடன் இணைய விருப்பமில்லை” – திவ்யா சத்யராஜ் | Divya Sathyaraj says she was getting offer to join bjp

“அழைப்பு வந்தது… ஒரு மதத்தை போற்றும் கட்சியுடன் இணைய விருப்பமில்லை” – திவ்யா சத்யராஜ் | Divya Sathyaraj says she was getting offer to join bjp


சென்னை: “வரும்‌ தேர்தலில்‌ போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான்‌. ஆனால்‌, எந்த ஒரு மதத்தைப்‌ போற்றும்‌ கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம்‌ இல்லை” என சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “வணக்கம்‌. எனக்கு அரசியலில்‌ ஆர்வம்‌ உண்டு என்று சில பத்திரிக்கை நண்பர்களிடம்‌ சொல்லியிருந்தேன்‌. அதற்குப்‌ பிறகு எல்லோரும்‌ என்னைக்‌ கேட்கும்‌ கேள்விகள்‌ ‘நீங்கள்‌ எம்‌.பி ஆவதற்காக அரசியலுக்கு வருகிறீர்களா? ராஜ்யசபா எம்‌.பி ஆகனும்கற ஆசை இருக்கா? மந்திரி பதவி மேல்‌ ஆர்வம்‌ உள்ளதா? சத்யராஜ்‌ உங்களுக்குப்‌ பிரச்சாரம்‌ செய்வாரா?’ இப்படிப்‌ பல கேள்விகள்‌.

நான்‌ பதவிக்காகவோ, தேர்தலில்‌ வெல்வதற்காகவோ அரசியலுக்கு வரவேண்டும்‌ என்று நினைக்கவில்லை. மக்களுக்காக வேலை செய்வதற்காகத்‌ தான்‌ அரசியலுக்கு வரவேண்டும்‌ என்று நினைக்கிறேன்‌. நான்‌ களப்பணிகள்‌ செய்ய ஆரம்பித்து சில வருடங்கள்‌ ஆகிறது. ‘மகிழ்மதி இயக்கம்‌’ என்ற அமைப்பை மூன்று வருடங்களுக்கு முன்‌ ஆரம்பித்தேன்‌.

அந்த அமைப்பின்‌ மூலம்‌ தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்குக்‌ கீழ்‌ இருக்கும்‌ மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறது. நான்‌ தனிக்கட்சி ஆரம்பிக்கப்‌ போவதில்லை.

வரும்‌ தேர்தலில்‌ போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான்‌. ஆனால்‌, எந்த ஒரு மதத்தைப்‌ போற்றும்‌ கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம்‌ இல்லை.

எந்தக்‌ கட்‌சியுடன்‌ இணையப்‌ போகிறேன்‌ என்பதை தேர்தல்‌ முடிந்தவுடன்‌ அறிவிப்பேன்‌. சத்யராஜ்‌ அவர்களின்‌ மகளாகவும்‌, ஒரு தமிழ்‌ மகளாகவும்‌, தமிழகத்தின் நலன்‌ காக்க உழைப்பேன்‌” என தெரிவித்துள்ளார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *