Business

அல்கஸார் ஃபேஸ்லிப்டில் கொடுக்கப்பட்டிருக்கும்.. ஆனால், xuv 700, சஃபாரி மற்றும் ஹெக்டர் பிளஸ் மாடல்களில் இல்லாத 4 வசதிகள்!

அல்கஸார் ஃபேஸ்லிப்டில் கொடுக்கப்பட்டிருக்கும்.. ஆனால், xuv 700, சஃபாரி மற்றும் ஹெக்டர் பிளஸ் மாடல்களில் இல்லாத 4 வசதிகள்!


கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அப்டேட் செய்யப்பட்ட அல்கஸார் ஃபேஸ்லிப்ட் மாடலை வெளியிட்டது ஹூண்டாய். 2021ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிறகு, தற்போது தான் அல்கஸார் மாடலை பெரியளவில் அப்டேட் செய்திருக்கிறது அந்நிறுவனம்.

இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா XUV 700, டாடா சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக புதிய அல்கஸார் ஃபேஸ்லிப்ட் மாடலை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய்.

மேற்கூறிய மாடல்களில் இல்லாத அல்லது மேற்கூறிய மாடல்களில் கொடுக்கப்பட்டிருப்பதை விட சிறப்பான சில வசதிகளையும் இந்த அல்கஸார் ஃபேஸ்லிப்ட் மாடலில் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். அப்படியான நான்கு வசதிகளைக் குறித்து இங்கே பார்க்கலாம்.

NFC தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் கீ:

NFC தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் கீ:

டிஜிட்டல் கீ என்பது இந்திய சந்தைக்கு புதிது இல்லை. ஆனால், NFC (Near Field Communication) தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் கீ என்பது இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்குப் புதிது தான்.

இந்த வகையில், காரின் டிஜிட்டல் கீயை 3 பேருடன் பகிர்ந்து கொள்ளலாம். மேலும், ஸ்மார்ட்வாட்ச் உட்பட 7 சாதனங்களில் காரின் டிஜிட்டல் கீயை சேமித்து வைத்துக் கொள்ளலாம். டிஜிட்டல் கீயைக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்வாட்சையோ அல்லது ஸ்மார்ட்போனையோ காரின் கதவுகளில் லேசாக தட்டினால் போதும், NFC தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால் உடனே திறந்து விடும்.

தை குஷன் எக்டன்ஷன்:

தை குஷன் எக்டன்ஷன்:

புதிய ஃபேஸ்லிப்ட் மாடலில், இரண்டாம் வரிசை இருக்கைகளில் தை குஷன் எக்ஸ்டன்ஷனைக் (Thigh Cusion Extension) கொடுத்திருக்கிறது ஹூண்டாய். அடித்தொடைக்கு கூடுதல் சப்போர்ட் கொடுப்பதன் மூலம், கால்களுக்கு கூடுதல் சொகுசைக் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். நீண்ட தூரப் பயணங்களின் போது இந்த வசதி பயணத்தை இலகுவாக்கும். கடந்த மாதம் வெளியான பஸால்ட் கூபே எஸ்யூவி மாடலில் கூட இந்த வசதியைக் கொடுத்திருந்தது சிட்ரன்.

8-வே பவர்டு முன்பக்க சீட்கள்:

8-வே பவர்டு முன்பக்க சீட்கள்:

இந்த பிரிவிலேயே முதல் முறையாக 8-வே பவர்டு டிரைவர் மற்றும் பாஸஞ்சர் சீட்களை, அல்கஸார் ஃபேஸ்லிப்டில் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். இதன் போட்டியாளர்களான XUV 700, ஹெக்டர் பிளஸ் மற்றும் சஃபாரியின் 6-வே பவர்டு சீட்டே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் டிரைவர் சீட்டுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. 8-வே பவர்டு சீட் மட்டுமின்றி, எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய முன்பக்க சீட்களுக்கு மெமரி ஃபங்ஷன் வசதியையும் கொடுத்திருக்கிறது ஹூண்டாய்.

வயர்லெஸ் சார்ஜர்:

வயர்லெஸ் சார்ஜர்:

வயர்லெஸ் சார்ஜர் வசதியானது தற்போது அனைத்து பிரிவுகளில் விற்பனையாகும் கார்களிலும் கொடுக்கப்படும் ஒன்றுதான். ஆனால், இரண்டாம் வரிசை இருக்கைக்கு வயர்லெஸ் சார்ஜரை எந்தவொரு கார் தயாரிப்பு நிறுவனமும் இதுவரை கொடுக்கவில்லை. முதல் முறையாக அல்கஸார் ஃபேஸ்லிப்டில் அதனைக் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். மேலும், இந்தக் காரில் டைப்-C சார்ஜிங் போர்ட்களை மூன்று வரிசை சீட்களுக்கும் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *