Business

அறிமுக சலுகை முடிந்தது… Ather 450 apex-ன் விலை உயர்வு! – News18 தமிழ்

அறிமுக சலுகை முடிந்தது… Ather 450 apex-ன் விலை உயர்வு! – News18 தமிழ்


இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏதர் எனர்ஜி, இந்த ஆண்டின் தொடக்கமான ஜனவரி 2024ல் ஏதர் 450 அபெக்ஸ்-ஐ வெளியிட்டது. இந்த ஸ்டார்ட்-அப்பின் 10வது ஆண்டைநிறைவை நினைவுகூரும் வகையில் , ஏதர் 450 அபெக்ஸ் ரூ.1.89 லட்சம் என்ற -இன் அறிமுக சலுகை எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியானது. இந்த நிலையில் அறிமுக சலுகை காலம் முடிந்ததையடுத்து, தற்போது 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.6,000 வரை அதிகரித்து இருக்கிறது. ஆகையால், தற்போது ஏதர் 450 அபெக்ஸ்-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.95 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஏதர் 450 அபெக்ஸ் ஓர் சிறப்பு பதிப்பு என்றும், அது அக்டோபர் 2024 வரை மட்டுமே விற்பனையில் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுபற்றிய துல்லியமான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஏதரின் 450 சீரிஸில், 450S மற்றும் 450X-ஐ தொடர்ந்து கடைசி மாடலாக வெளியானது இந்த 450 அபெக்ஸ். ஸ்டாண்டர்டான 450 ஸ்கூட்டரின் டிசைனையே இந்த 450 ஏபெக்ஸ் மாடலும் கொண்டிருந்ததால், இதனை தனித்துக் காட்ட இன்டியம் ப்ளூ மற்றும் ஆரஞ்சு நிற பெயிண்ட் ஸ்கீம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஏதர் 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 9.4hp பவர் மற்றும் 26Nm டார்க்கை(torque ) வெளிப்படுத்தக்கூடிய 7.0kW எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.

விளம்பரம்

ஏதர் 450 அபெக்ஸ் புதிய மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ‘Magic Twist’ எனர்ஜி மேனேஜ்மென்ட் அல்காரிதம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த அமைப்பானது முழுமையான வாகன நிறுத்தத்தை உறுதி அளிக்கிறது. பேட்டரி அளவை பொருட்படுத்தாமல், பிரேக்குகளை பயன்படுத்தாமல் ஸ்கூட்டரை முழுமையாக நிறுத்த முடியும்.

இது அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இது 450 எக்ஸ் மாடலைக் காட்டிலும் 10 கிமீ அதிக வேகம் ஆகும். இந்த வேகத்தை அது வெறும் 2.9 செகண்டுகளிலேயே எட்டிவிடும். இத்துடன், ‘மேஜிக் ட்விஸ்ட்’ எனும் வசதியையும் முதல் முறையாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏதர் அறிமுகம் செய்திருக்கின்றது.

விளம்பரம்

Also Read |
ஏர் ஹோஸ்டஸ் சம்பளம்: விமானப் பணிப்பெண்ணின் 1 மாத சேலரி எவ்வளவு தெரியுமா?

சிறந்த வீடியோக்கள்

இது ஓர் அட்வான்ஸ்டு ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகும். முழு எஞ்சின் ஹால்ட்டை இந்த தொழில்நுட்பம் மேற்கொள்ளும். மிக சிறந்த ரேஞ்ஜ் திறனை வழங்குவதற்காக 3.7 kWh பேட்டரி பேக் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஒரு முழு சார்ஜிற்கு 157 கிமீ வரையிலான ரேஞ்சை தரும். இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஏதர் தன்னுடைய லேட்டஸ்ட் தயாரிப்பின் விலையை உயர்த்தி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
  • முதலில் வெளியிடப்பட்டது:



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *